Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
தலைமுடி நீளமாக வளரவும் முகம் சிகப்பழகு பெறவும் கலாக்காய்... எப்படி யூஸ் பண்ணணும்?
கலாக்காயை முடி வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கும் சருமத்துக்கும் எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறிய கருப்பு மற்றும் பச்சை, சிவப்பு உருண்டை போல் இருக்கும் ஒரு பழம் உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பல அற்புத நன்மைகளைத் தருகிறது. ஆம், அது கலாக்காய். கலாக்காய் என்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.
இது தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த கலாக்காய் சருமத்தை தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து பாதுகாக்கிறது. வைட்டமின்கள், கனிமங்கள், ஆகியவை அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் பல நன்மைகளைச் செய்கிறது. இதனை உட்கொள்வதாலும் உடலில் மற்றும் சருமத்தில் மாஸ்க் போல் பயன்படுத்துவதாலும் பல அற்புதங்கள் நிகழ்கின்றன.
கலாக்காய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

வயது முதிர்வைத் தடுக்கும்
கலாக்காய் வைடமின் மற்றும் ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குகிறது. சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்கும் தன்மை இருப்பதால் வயது முதிர்விற்கான அறிகுறிகளைத் தாமதப்படுத்துகிறது. அதனால் வயது முதிர்வைத் தடுக்கும் க்ரீம் மற்றும் சீரம் போன்றவற்றில் கலாக்காய் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து கலாக்காய் சாப்பிடுவதால் அல்லது பயன்படுத்துவதால் பொலிவான சருமம் உறுதியாக கிடைக்கிறது.

சரும நிறமிழப்பு
சரும நிறமிழப்பைக் குறைப்பது கலாக்காயின் முக்கிய பண்புகளுள் ஒன்றாகும். மேலும் கருந்திட்டுகளைப் போக்கி சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது.

பருக்கள் மற்றும் கட்டிகள்
பருக்கள், கட்டிகள், மற்றும் கொப்பளங்கள் சிகிச்சைக்கு கலாக்காய் பெருமளவில் பயன்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக பல்வேறு சரும பிரச்சனைகளையும் தீர்க்க இது உதவுகிறது.

தழும்புகளைப் போக்குகிறது
பருக்கள் மற்றும் கட்டிகளை போக்குவதில் மட்டுமல்ல பல்வேறு சரும பாதிப்புகளையும் போக்க வல்லது இந்த கலாக்காய். பருக்கள் மற்றும் கட்டிகள் மூலமாக சருமத்தில் உண்டாகும் தழும்புகளை போக்கி களங்கமற்ற சருமம் உண்டாக்குவதில் நல்ல பலன் தருகிறது.

நீர்ச்சத்து மற்றும் புத்துணர்ச்சி
சருமத்தை புத்துணர்ச்சி தந்து நீர்ச்சத்தோடு வைக்க உதவும் ஒரு பொருள் கலாக்காய். உங்கள் உடலில் மிகவும் உணர்ச்சி மிகுந்த பகுதி உங்கள் சருமம் என்பதால் எளிதில் எந்த ஒரு பிரச்சனையும் அதனை பாதிக்கலாம். அதனால் காலகட்டத்திற்கு ஏற்ப கிடைக்கும் பழங்கள் மூலம் அவற்றின் நன்மைகளை சருமத்திற்கு கொடுப்பது மிகவும் அவாசியம். இதற்கு கலாக்காய் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மென்மையான உதடு
சருமத்தை மேம்படுத்த மட்டுமில்லாமல் அழகான உதடுகளைப் பெறவும் கலாக்காய் உதவுகிறது. கலாக்காயை தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் உதடுகள் மிகவும் மிருதுவாக, மென்மையாக நீர்ச்சத்துடன், பிங்க் நிறத்தில் இருக்க முடிகிறது. கலாக்காயில் ஈரப்பதத்திற்கான தன்மைகள் இருப்பதால் அவை உதடுகளுக்கு நன்மையைச் செய்கின்றன. கலாக்காய் பயன்படுத்தி வீட்டிலேயே லிப் பாம் தயாரித்து உபயோகிக்கலாம். அல்லது கடையில் வாங்கியும் பயன்படுத்தலாம்.

கூந்தலுக்கு கலாக்காயின் நன்மைகள்
கலாக்காய் உங்கள் சருமத்திற்கு மட்டும் நன்மை தருவதில்லை உங்கள் கூந்தலும் கலாக்காயால் பல நன்மைகளை அடைகின்றது. கலாக்காய் பயன்படுத்துவதால் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கூந்தலின் வேர்க்கால்
கலாக்காய் முடியின் வேர்க்கால்களை வலிமையாக்க உதவுகிறது. அதனால் கூந்தல் வலிமையுடன், ஆரோக்கியமாக, பளபளப்பாக, நீளமாக வளர்கிறது. கலாக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் முடி உதிர்வு, முடி உடைவது போன்றவற்றைக் குறைக்கிறது , மேலும் நுனி முடி உடைவது மற்றும் கூந்தல் சேதமடைவது போன்றவற்றைத் தடுக்கிறது.

கூந்தல் வளர்ச்சி
கலாக்காயில் புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் கூந்தல் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் இவற்றில் உள்ள வைட்டமின்களான ஏ, பி காம்ப்ளெக்ஸ், சி, ஈ போன்றவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. புரதம், ஊட்டச்சத்து, மற்றும் வைட்டமின்கள் இணைந்து முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றன.

உச்சந்தலை ஆரோக்கியம்
கூந்தல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருப்பதற்கு உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். உச்சந்தலை ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் கலாக்காய் பெரும் பங்கு வகிக்கிறது. உச்சந்தலை ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஊக்கப்படுத்தி ஆரோக்கியமான முடியைத் தருகிறது. தொடர்ந்து கலாக்காயை பயன்படுத்தி வருவதால் முடியின் வேர்க்கால்கள் வலிமையடைந்து போதிய கவனம் மற்றும் பராமரிப்பு கிடைக்கப்பெறுகிறது.
என்ன வாசகர்களே, கலாக்காய் பற்றி இதுவரை தெரியாத பல விஷயங்களை இப்போது தெரிந்து கொண்டீர்களா? இனி உங்கள் சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களில் இதனையும் ஒன்றாக்கிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications












