Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
தாய்ப்பாலில் மறைந்துள்ள அழகு குறிப்புகள்...
பெண் என்றாலே ஒரு அற்புத ஜீவராசி. தன்னுடைய உயிரையே பணயம் வைத்து இன்னொரு உயிரை உருவாக்கும் தன்னலமற்ற உயிரினம். அதிலும் தாய்மை என்றாலே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் மட்டற்ற மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். தாய்
பெண் என்றாலே ஒரு அற்புத ஜீவராசி. தன்னுடைய உயிரையே பணயம் வைத்து இன்னொரு உயிரை உருவாக்கும் தன்னலமற்ற உயிரினம். அதிலும் தாய்மை என்றாலே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் மட்டற்ற மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். தாய்மை பருவத்தில் குழந்தையை பராமரிப்பது மிகவும் அழகான மற்றும் கொஞ்சம் கடினமான விஷயமே. இதில் தாய்மையான ஒன்று தாய்ப்பாலை குழந்தைக்கு ஊட்டுவதே.

தாய்ப்பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சி,ஆரோக்கியம் எல்லாமே இதனை சார்ந்துதான் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமான தாய்ப்பாலில் பல அழகு குறிப்புகள் ரகசியம்போல ஒளிந்திருகிறது. இத்தனை நாள் இந்த ரகசியத்தை தெரியாமலையே இருந்து வருகின்றோம். என்னது, தாய்ப்பாலில் அழகு குறிப்பா..? உங்களின் ஆச்சரியமான கேள்விகளுக்கு பதில் உள்ளது. தாய்ப்பாலில் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள் என்னென்ன என்பதை இனி தெரிந்துகொள்வோம்.

#1 வீக்கத்தை குறைக்க
இரவில் அதிகம் கண் விழித்ததால் கண்கள் வீங்கிவிட்டதா..? உடனே சரி செய்ய வழி இருக்கே. குழந்தை தாய்ப்பால் குடிக்காத நேரத்தில் பால் கட்டி கொள்ளாமல் அதனை முகத்திற்கு பயன்படுத்தலாம். தாய்ப்பாலில் இயற்கையாகவே முகத்தில் ஏற்பட்ட வீக்கத்தை போக்கும் தன்மை உள்ளது. அத்துடன் சேர்த்து கருவளையங்களையும் காணாமல் போக செய்யும். தாய்ப்பாலை காட்டன் துணியால் வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் விரைவில் வீக்கம் குறையும்.

#2 ஃபேஸ் வாஷ்
தாய்ப்பாலில் ஃபேஸ் வாஷா..? இது என்னபா புதுசா இருக்கேனு யோசிக்கிறீர்களா..? உண்மைதாங்க. தாய்ப்பாலில் ஃபேஸ் வாஷ் செய்தால் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள், கீறல்கள் குணமடையும். தாய்ப்பாலில் அதிகம் லாரிக் அமிலம் உள்ளதால் சருமத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும். தினமும் தாய்ப்பாலில் முகத்தை கழுவினால் மங்கிப்போன உங்கள் முகம் மிகவும் பொலிவுடன் மாறிவிடும். ஒரு சிறிய காட்டன் துண்டை தாய்ப்பாலில் நனைத்து கொண்டு அதனை முகத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். கண்டிப்பாக உங்கள் கலை இழந்த முகம் வெண்மையாக மாறும்.

#3 மென்மையான உதடு
குளிர் காலம் என்றாலே உதடுகள் ஈர்ப்பதமின்றி காய்ந்து விடும். அத்துடன் சேர்த்து உதடுகளில் வெடிப்புகள் வர கூடும். அதிக ஆன்டி செப்டிக்,ஆன்டி பாக்டீரியல் தன்மையுடைய தாய்ப்பால், சருமம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வை தரும். அதில் ஒன்றுதான் பனி வெடிப்பு. வறண்டு போன உங்கள் உதடுகளில் தாய் பாலால் ஒத்தடம் கொடுத்தால் ஈர்ப்பதுடன் எப்போதும் இருக்கும். மேலும் உதடுகள் வெடிப்பு வந்து புண் ஆவதை தடுக்கும்.

#4 லோஷன்
உங்கள் தோல் மிகவும் சொரசொரப்பாக இருக்கிறதா..? முகம் மிகவும் வறட்சியாக உள்ளதா..? இதனை சரி செய்ய வழி இருக்கிறது. தாய்ப்பாலில் உள்ள அதிக மென்மை தன்மை முகத்திற்கு பளபளப்பை தந்து வறட்சியை நீக்குகிறது. 1 டீஸ்பூன் ஓட்ஸ் மாவு, சிறிது தேன் மற்றும் சிறிதளவு தாய்ப்பால் ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்கவும்.சிறிது நேரம் குளிர வைத்து பின்பு முகத்தில் 15 நிமிடம் பூசி, காட்டன் துணியால் நீரில் நனைத்து துடைத்து விடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்தால் சொரசொரப்பான வறண்ட சருமம் மொழு மொழுவென மாறும்.

#5 மாஸ்க்
சிறிது முல்தானி மட்டியை எடுத்து கொன்டு அதனுடன் தாய்ப்பாலை சேர்த்து கலக்கவும். பிறகு இந்த ஃபேஸ் மாஸ்க்கை முஅத்தின் 15 நிமிடம் போட்டு கழுவவும். இது முகத்திற்கு அதிக மினுமினுப்பை தந்து அழுக்கு அழகூட்டும். அரிப்புகள் கொண்ட சருமம் இதனால் குணமடையும். அத்துடன் எப்போதும் குளுமையாக இருக்கவும் செய்யும்.

#6 சுத்தம் செய்தல்
உங்கள் முகத்தில் அதிகம் கரும்புள்ளிகள் இருந்தால் அதனை சரி செய்ய வழி இதோ இருக்கிறது. தாய்ப்பாலை சிறிது தேனுடன் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். அதன்பிறகு 15 நிமிடம் முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சருமம் சுத்தமடைந்து கரும்புள்ளிகள் நீங்கும். மேலும் கருமையான முகம் வெண்மையாக காட்சியளிக்கும்.

#7 சூடு கட்டி
முகம் மற்றும் தோள்களில் சூடு கட்டிகள் அதிகம் வந்துள்ளதா..? இதை குணப்படுத்த தாய்ப்பாலே போதும். தாய்ப்பாலில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை சருமத்தில் ஏற்பட்டுள்ள எந்தவிதமான கட்டிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. தாய்ப்பாலை சிறிது எடுத்து முகத்தில் பூசினால் கட்டுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.



Click it and Unblock the Notifications