Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
ஆண்களின் முகத்தை நீண்ட காலம் இளமையாக வைக்க கொய்யாப்பழத்தை இப்படி பயன்படுத்துங்க..!
மனிதனாக பிறந்த பலருக்கும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க தானே செய்யும். அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம் உதவுகிறது. கொய்யாவின் மருத்துவ குணம் நம் அனைவருக்குமே நன்றாக தெரியும்.

கொய்யாவின் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த கொய்யாவை முக அழகிற்கும் பயன்படுத்தலாமாம். அது எவ்வாறு என்பதை இனி தெரிந்து கொண்டு பயன் பெறுவோம்.

சுவைமிக்க கொய்யா..!
கொய்யவின் சுவைக்கு ஏற்றது போன்றே அதன் மகத்துவமும் அதிகம் உள்ளது. கொய்யாவை நாம் சாப்பிடவும், முகத்தில் பூசி கொள்ளவும் பயன்படுத்தலாம். இதனால் முக அழகு மற்றும் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இந்த பழத்தில் ஏரளமான சத்துக்கள் உள்ளன. அவை அனைத்தும் உங்களை அழகாவும் இளமையாகவும் வைத்து கொள்ள உதவும்.

சத்துக்கள் நிறைந்த கொய்யா..!
கொய்யாவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், தாது பொருட்கள், வைட்டமின்கள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் எ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் தான் கொய்யாவை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இளமையான முகத்தை பெற
பார்ப்பதற்கு 20 வயது இளைஞனை போன்று தோற்றம் அளிக்க வேண்டும் என நினைத்தால் உங்களுக்கு இந்த குறிப்பு அற்புதமாக உதவும்.
தேவையானவை :-
வாழைப்பழம் 1/2
கொய்யா பழம் 1/2
தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-
கொய்யா மற்றும் வாழை பழத்தை சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ்டுடன் தேன் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகம் இளமை பெறும்.

சுருக்கங்கள் மறைய
முகத்தை வயதானவராக காட்டுவதே இந்த சுருக்கங்கள் தான். உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய செய்ய இந்த குறிப்பு போதும்.
தேவையானவை :-
முட்டை வெள்ளை கரு 1
கொய்யா பழம் பாதி

செய்முறை :-
முதலில் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ள வேண்டும். பிறகு, கொய்யாவை அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த இரண்டையும் சேர்த்து கலக்கி முகத்தில் பூசி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தின் சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறும்.

முகப்பருக்களை ஒழிக்க
பருக்கள் தான் நமது முகத்திற்கு எதிரி. இதனை முற்றிலுமாக ஒழிக்க இந்த குறிப்பு பயன்படும்.
தேவையானவை :-
கொய்யா இலைகள் 10
வேப்பிலை இலைகள் 10
மஞ்சள் சிறிது

செய்முறை :-
பருக்களை விரைவில் மறைய வைக்க, முதலில் இந்த கொய்யா மற்றும் வேம்பு இலைகளை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் காணாமல் போய்விடும்.

கருமையை நீக்க
முகத்தில் உள்ள கருமையை நீக்க பல வகையான வைத்தி பொருட்கள் இருந்தாலும் இந்த கொய்யா வைத்தியம் அற்புதமாக வேலை செய்கிறது. இதற்கு தேவையானவை...
கொய்யா பழம் 1/2
ஓட்ஸ் 2 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் ஓட்ஸ் மற்றும் கொய்யாவை சேர்த்து கொண்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருமையான நிறம் நீங்கி வெண்மையான நிறமாக மாறும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications
