Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க
தேவதை போன்று உங்கள் காதலி மாற வேண்டுமா..? அதற்கு இந்த ஒரு இலையே போதும்.
சிலர் தன் காதலியின் அழகிற்கு அழகு சேர்க்க விரும்புவார்கள். அப்படி தேவதை போன்று அவர்களை அழகு பெற செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான இலை இருக்கிறது. அது என்ன இலைனு யோசிக்கிறீங்களா..? பல
எல்லோருக்கும் அவரவர் காதலியின் மீது அதீத அன்பு இருக்கத்தான் செய்யும். காதலன், தன் காதலி என்றுமே ஒரு தேவதையாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். இது மனிதனின் இயலப்பான விஷியமாகவே உள்ளது. சிலர் தன் காதலியின் அழகிற்கு அழகு சேர்க்க விரும்புவார்கள். அப்படி தேவதை போன்று அவர்களை அழகு பெற செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான இலை இருக்கிறது. அது என்ன இலைனு யோசிக்கிறீங்களா..? பல வகையான அழகு குறிப்புகளை தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கொய்யா இலைதான் அது. கொய்யா இலையின் மகத்துவத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளவோம்.

முக சுருக்கங்களை நீக்க :-
முகத்தில் சுருக்கம் வருவது இன்று பெரும்பாலோர்க்கு உள்ள பிரச்சினையே. உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் குறைவால் இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக இது இளமையை விரைவிலேயே இழக்க செய்துவிடும். இதற்கு சிறந்த தீர்வு கொய்யா இலையே. இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் முக சுருக்கத்தை போக்கி "என்றும் பதினாறு" போல தோற்றத்தை தரும். இந்த இலைகளை காயவைத்து பொடி செய்து நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் சுருக்கங்கள் மறையும்.

முகப்பரு போக்க :-
முகத்தின் அழகை கெடுப்பதில் முதல் இடத்தில் இருப்பது இந்த முகப்பருக்களே. இது சில வகையான பாக்டீரியாக்களால் முகத்தில் வருகிறது. கொய்யா இலையில் பாக்டீரியாக்களை கொள்ளும் தன்மை உள்ளதால், இதனை அரைத்து முகப்பருக்களை முகத்திற்கு பயன்படுத்தினால் விரைவிலேயே முக பருக்களை காணாமல் போக செய்துவிடும்.

கரும்புள்ளிகளை அகற்ற :-
பலருக்கு இறந்த செல்கள் முகத்திலேயே தங்கி விடுகின்றன. இதனால் அவர்களுக்கு கரும்புள்ளிகள் வருகிறது. இது முக அழகையே முற்றிலுமாக கெடுத்து விடும். இதனை அகற்ற கொய்யா இலையை அரைத்து, அதனுடன் 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த அழகு குறிப்பு உங்கள் காதலியின் முகத்தை கண்டிப்பாக தேவதை போல மாற்றும்.

தோல் பிரச்சினைகளை குணப்படுத்த :-
அதிக மாசுக்கள் ஏற்படுவதால் தோலில் பல வகையான நோய் தொற்றுகளும் வருகின்றது. இதற்கு தீர்வு தருகிறது கொய்யா இலை. இதில் அதிகம் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே இருப்பதால் தோலின் சரும பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மேலும் தோல் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும்.

சரும புத்துணர்ச்சிக்கு :-
உங்களின் காதலியின் சருமம் என்றுமே புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்றால் நம்ம கொய்யா இலை அதற்கு உதவும். கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். அத்துடன் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

UV கதிர்களில் இருந்து பாதுகாக்க :-
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்கள், முகம் மற்றும் தோல்களையும் பாதிக்க செய்யும். சுற்றுசூழல் சீர்கேட்டால் இதன் பாதிப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளது. இதனை சரி செய்ய கொய்யா இலையை வெயிலில் உலர வைத்து, பொடி செய்து பின் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல போடவும். 20 நிமிடம் கழித்து இதனை காட்டன் துணியால் துடைத்து விடவும். இது நல்ல பலனை தரும்.

வெண்மையான முகம் பெற :-
உங்கள் காதலியின் முகம் மிகவும் வெண்மையாக இருக்க இந்த அழகு குறிப்பை பயன்படுத்துங்கள். கொய்யா இலையை அரைத்து அதனுடன் சிறுது ரோஸ் நீரை ஊற்றி கலக்கவும். பின் சிறிதளவு மஞ்சளையும் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் மினுமினுப்பான தேவதை போன்ற சருமம் பெறலாம்.
இந்த தேவதை போன்ற முக சருமம் தரும் கொய்யா இலையின் மகத்துவத்தை உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.



Click it and Unblock the Notifications
