Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
பேபி ஆயில் எப்படி உங்கள் அழகை மிளிரச் செய்யும் என தெரியுமா?
குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் பேபி ஆயில் மற்றும் ஜெல்லைக் கொண்டு நமது சருமத்தை மிளிரச் செய்யும்.
குழந்தைகளுக்கான எண்ணை வகைகளுக்கும் ஜெல்லிற்கும் வித்தியாசம் உண்டு. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் தோலினை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மட்டுமே உதவும்.
ஆனால் குழந்தைகளுக்கு பயன்படுத்தபடும் எண்ணெய் ஜெல் தோலின் உட்புறத்தால் உரியப்பட்டு தோல் மிருதுவாக இருக்க உதவுகிறது. மேலும் இக்களிம்புகள் அபிரிதமான ஈரப்பதத்தைகொடுக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த குழந்தைகளுக்கான களிம்புகளை, அழகை கூட்டும் சாதனமாக அனைத்து வயதினரும் உபயோகித்து பயன் பெறலாம். இதன் சிறப்பை அறியாமல் நாம் அந்த களிம்புகளை குழந்தைகளின் பயன்பாட்டிற்கு மட்டுமே இன்று வரை பயன்படுத்தி உள்ளோம்.

குழந்தைகளுக்கான எண்ணெய் களிம்புகளில் 98% கனிம எண்ணையும் 2% நறுமணத்திற்கான கலவையும் உள்ளது.கனிம எண்ணெய் தோலின் துவாரங்கள் அடைத்து கொள்ளாமல் பாதுகாக்கும். இது தோலிற்கு நல்ல பலனை கொடுக்கும். இந்த கட்டுரையில் குழந்தைகளுக்கான எண்ணெய் களிம்புகளை பயன்படுத்தி எவ்வாறு நம்மை அழகு படுத்திக்கொள்ளலாம் என்பதை விரிவாக காணலாம்.

உடல் மசாஜ் :
நீங்கள் குளித்த பின்னர் குழந்தைகளுக்கான எண்ணெய் களிம்பை ஈரமான உடலில் தேய்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த மசாஜ் செய்த பின் இயல்பாக அதனை உலர செய்ய வேண்டும்.இதன் மூலம் உங்கள் உடல் ஈரப்பதத்தை பெற்று நீர்ச்சத்துடன் காணப்படும்.

குதிகால் வெடிப்பை போக்குதல்:
வறண்ட தன்மையை கொண்ட குதிகால் வெடிப்புகளுக்கு இந்த களிம்புகளை பயன்படுத்தலாம்.உறங்க போவதற்கு முன் குதிகால்களை நன்கு கழுவி இந்த களிம்பை பூச வேண்டும்.காலுறைகள் கொண்டு உங்கள் குதிகால்களை நன்றாக மறைத்துக்கொள்ள வேண்டும்.
காலையில் குதிகால்கள் இதன் மூலம் ஈரப்பதத்தை பெற்று மிருதுவாக காணப்படும். மழைக்காலங்களில் இந்த முறையை தினமும் பின்பற்றினால் நல்ல பலனை கொடுக்கும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்குதல் :
மகப்பேறு காலத்தில் உங்கள் வயிற்று பகுதியின் தோல் விரிவடைந்து வறட்சியாக காணப்படும்.குழந்தைகளுக்கான எண்ணெய் களிம்பை வயிற்றில் பூசுவதன் மூலம் தோல் மென்மை அடைகிறது.மகப்பேறு காலத்தில் இந்த களிம்பை அதிகம் பயன்படுத்தி நன்மை பெறலாம்.

முக ஒப்பனையை நீக்குதல் :
உங்கள் முக ஒப்பனையை நீக்குவதற்கு இந்த களிம்பு பயன்படுகிறது.உங்கள் முகத்தில் இந்த களிம்பை வட்ட வடிவில் மெதுவாக தேய்க்க வேண்டும்.சில நிமிடங்களுக்கு பிறகு காட்டன் துணி மூலம் உங்கள் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் ஒப்பனை நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.
இதன் மூலம் முகத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய் தன்மையை போக்க முடியும். இந்த களிம்பை உபயோகிப்பதால் உங்கள் முகம் மென்மையான தன்மையை விரைவாக பெற்று விடும்.

குளியலுக்கு பயன்படுத்தல் :
இந்த களிம்பை நீங்கள் குளியல் தொட்டியில் குளிக்கும்போது பயன்படுத்தலாம். குளியல் தொட்டியில் கொதிக்கவைத்த நீருடன் சிறிது களிம்பை சேர்த்துக்கொள்ள வேண்டும்.இது உங்கள் தோலுக்கு நல்ல மிருதுவான தன்மையை கொடுக்கும்.

ஷேவ் செய்ய பயன்படுத்தல் :
பெண்கள் காலில் உள்ள முடியை ஷேவ் செய்ய விலையுயர்ந்த ஷேவிங் கிரீமை உபயோகிக்க வேண்டியதில்லை .குழந்தைகளுக்கான எண்ணெய் களிம்பை காலில் பூசிய பின் ஷேவ் செய்ய தொடங்கலாம்.
இதன் மூலம் காலில் காயமோ அரிப்போ ஏற்படாது.மேலும் ஷேவ் செய்த பின் பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் செயற்கை கிரீம்களை தவிர்த்து , இந்த களிம்பின் மூலம் நல்ல பலனை பெற முடியும்.

கூந்தலின் வறட்சியை போக்குதல் :
உங்கள் கூந்தலின் நுனியில் வறட்சி தென்பட்டால் இந்த களிம்பை பயன்படுத்தலாம். சிறிய துணி மூலம் அந்த களிம்பை எடுத்து உங்கள் கூந்தலில் பூச வேண்டும்.அந்த களிம்பு உங்கள் கூந்தலின் ஆழம் வரை செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் உங்கள் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் தென்படும். இந்த களிம்பை ஒரு துணியில் நனைத்த பின்னரே கூந்தலில் பூச வேண்டும்.
அதற்கு மாறாக களிம்பை நேரடியாக கூந்தலில் தேய்த்தால் அது தேவையற்ற பசைத்தன்மையை கொடுத்து உங்கள் அழகை கெடுத்து விடும்.

ஷேவ் செய்தபின் உபயோகித்தல் :
ஆண்கள் ஷேவ் செய்த பின் தோல் எரியாமல் இருப்பதற்கும் ஈரப்பதத்தை கூட்டுவதற்கும் சில 'ஆப்ட்டர் ஷேவ்' ஜெல்களை பயன்படுத்துவர். இதற்கு பதில் குழந்தைகளுக்கான எண்ணெய் களிம்புகளை இந்த தேவைக்கு பயன்படுத்தலாம்.

அழகான உதடுகளை பெறுதல் :
குழந்தைகளுக்கான எண்ணெய் களிம்பை பயன்படுத்தினால் அழகான உதடுகளை பெற முடியும்.ஒரு தேக்கரண்டி மேலே கூறிய களிம்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனுடன் அரை கரண்டி சர்க்கரை மற்றும் லெமன் சாறு கலந்து உதட்டில் மெதுவாக தேய்க்க வேண்டும்.இரவு உறங்கும்முன் இந்த களிம்பை பயன்படுத்தினால் காலையில் உங்கள் உதடு அழகாகவும் மென்மையாகவும் காட்சியளிக்கும்.

கண் புருவங்களை அழகாக்குதல் :
இந்த களிம்பை பயன்படுத்தி உங்கள் புருவங்களை அழகாக்க முடியும். புருவங்களை நேர்த்தியாக்க உபயோகிக்கப்படும் ப்ரஷ் மூலம் அந்த களிம்பை எடுத்து புருவங்களுக்கு பூச வேண்டும்.

வேக்சிங் செய்த பின் உபயோகித்தல் :
பெண்கள் வேக்சிங் செய்த பின் தோலில் ஒரு பசைத்தன்மை இருப்பதை உணருவர். குழந்தைகளுக்கான எண்ணெய் களிம்பை நேரடியாக தோலின் மேல் பயன்படுத்தினால் அந்த பசைத்தன்மை முற்றிலும் விடுபடும். அல்லது ஒரு துணியில் அந்த களிம்பை எடுத்து வேக்சிங் செய்த பகுதியில் தேய்த்து விட்டால் நல்ல பலன் கிடைக்கும்



Click it and Unblock the Notifications