Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
பார்லருக்கு வேணாம்!! வீட்டிலேயே முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்கும் எளிய வைத்தியம்!!
இயற்கை முறையில் வீட்டிலேயே முகத்தில் வளரும் முடிகளை அகற்றும் எளிய வைத்திய முறையை இங்கே சொல்லப்பட்டுள்ளது.
பெண்கள் தங்கள் தேவையற்ற முடியை நீக்குவதற்கு சலூன் சென்று வேக்சிங் செய்ய வேண்டியிருக்கிறது. உடம்பில் வளரும் பூனை முடியால் அவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
இப்பொழுது எல்லாம் குட்டையான பேஷன் உடைகளை வெளியில் போட்டு செல்வது அதிகரித்து வருகிறது. எனவே இந்த காலத்தில் எல்லா பெண்களும் இந்த தேவையற்ற முடியை நீக்கி மேனியை பட்டு போன்று வைக்க ஆசைப்படுகன்றன.

இந்த முடியை நீக்க நிறைய முறைகள் உள்ளன. இங்கே இதற்கு நிறைய இயற்கையான முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கான சிறந்த முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
உடம்பில் வளரும் பூனை முடியை விட உதட்டின் மேற்பகுதியில் இருக்கும் தேவையற்ற முடிகள் உங்களது தன்னம்பிக்கையை குறைத்து மற்றவர்கள் முன்னிலையில் வெட்கப்பட வைத்துவிடும். எனவே இங்கே உள்ள முறைகளை பயன்படுத்தி சலூன் போகாமலே நல்ல பலனை காணுங்கள்.

#1 முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் :
தேவையான பொருட்கள் :
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்
1 முட்டையின் வெள்ளை கரு
செய்முறை :
1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து உதட்டின் மேற்பகுதியில் தடவ வேண்டும்.
2. சில மணி நேரங்கள் கழித்து இந்த மாஸ்க்கை உரித்து எடுத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
3. வாரத்திற்கு 4 முறை இதை செய்தால் தேவையற்ற முடியை முற்றிலுமாக நீக்கிடலாம்.

#2 யோகார்ட் கடலை மாவு மற்றும் மஞ்சள் :
தேவையான பொருட்கள் :
2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்
2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
2 டேபிள் ஸ்பூன் கடலைமாவு
செய்முறை :
1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த பேஸ்ட்டை உதட்டின் மேற்பகுதியில் தடவி 15 நிமிடங்கள் உலர விடுங்கள்.
3. பிறகு அதை நன்றாக தேய்த்து அப்புறம் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

#3 மக்காச் சோள மாவு மற்றும் பால் :
இந்த முறை சுலபமான சிறந்த முறையாகும்.
தேவையான பொருட்கள் :
1/2 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவு
1 கப் பால்
செய்முறை :
1. ஒரு பெளலில் இந்த இரண்டு பொருட்களையும் பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்.
2. இதை உதட்டின் மேற்பகுதியில் தடவி உலர வைக்க வேண்டும்.
3. அதை 20 நிமிடங்கள் கழித்து உரித்து எடுக்கவும்.
4. வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முடியின் வளர்ச்சி குறைந்திருப்பதை காணலாம்.

#4 உருளைக்கிழங்கு ஜூஸ் :
இந்த ஜூஸ் உங்கள் சருமத்துவாரங்களை திறந்து சுலபமாக தேவையற்ற முடியை நீக்கிடும். மேலும் இது ஒரு இயற்கையான ப்ளிச்சிங் ஆக செயல்படும்.
தேவையான பொருட்கள் :
2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பருப்பு (துவரம் பருப்பு, கடலை பருப்பு)
1 உருளைக்கிழங்கு
1 டேபிள் ஸ்பூன் தேன்
செய்முறை :
1. பருப்பை இரவே ஊற வைக்கவும்.
2. தோலை நீக்கி உருளைக்கிழங்கை ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. ஊற வைத்த பருப்புடன், லெமன் ஜூஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஜூஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. தேன் கலந்து இந்த பேஸ்ட்டை உதட்டின் மேற்பகுதியில் தடவி 15 நிமிடங்கள் உலர விட வேண்டும்.
5. பிறகு நன்றாக தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதை அடிக்கடி செய்தால் நல்ல பலனை காணலாம்.

#5 தேன் மற்றும் எலுமிச்சை ஜூஸ் :
இந்த முறையில் தேன் மைல்டு வேக்சிங் ஆக செயல்படுகிறது.
எலுமிச்சை ஜூஸ் உங்களது சருமத்தை பொலிவாக்கி சின்ன முடிகளை காணாமல் செய்கிறது.
தேவையான பொருட்கள் :
1 டேபிள் ஸ்பூன் தேன்
1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ்
கொஞ்சம் வெதுவெதுப்பான நீர்
செய்முறை :
1. இந்த இரண்டையும் கலந்து உதட்டின் மேற்பகுதியில் தடவ வேண்டும்.
2. 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.
3. பிறகு மென்மையான காட்டன் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து அந்த பகுதியில் துடைத்து எடுங்கள்.
4. பிறகு தண்ணீரில் கழுவவும்.
5. வாரத்திற்கு 3-4 முறை செய்தால் முடியின் வளர்ச்சி குறைந்திடும்.
இந்த இயற்கையான முறைகள் மிகவும் பாதுகாப்பானது. இதை பயன்படுத்தி உங்கள் தேவையற்ற முடியை நீக்கி மற்றவர்கள் முன்னிலையில் அழகாக பிரதிபலிங்கள்



Click it and Unblock the Notifications
