Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
இங்கு சரும கருமையைப் போக்கும் ஓர் எளிய ஃபேஸ் மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
யாருக்கு தான் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்காது. இந்த காரணத்திற்காகவே பலரும் கடைகளில் விற்கப்படும் கண்ட அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இரசாயனம் கலந்த க்ரீம்கள் அல்லது லோசன்களைப் பயன்படுத்தினால், அது சரும செல்களின் ஆரோக்கியத்தை அழிக்கும்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் மாறும். சரி, இப்போது அந்த ஃபேஸ் மாஸ்க்கை எப்படி போடுவதென்று காண்போம்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 1
சர்க்கரை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்கும்.

சர்க்கரை
சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய மற்றும் ஆரோக்கியமான சரும செல்கள் வளர்ச்சி பெற உதவும்.

கற்றாழை ஜெல்
கற்றாழையில் உள்ள நொதிகள், சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்க உதவும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சருமத்தின் pH அளவைப் பராமரிக்க உதவும். மேலும் இது ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும்.

செய்முறை:
ஒரு பௌலில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் சர்க்கரை பவுடர், கற்றாழை ஜெல், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
பின்பு பிரஷ் பயன்படுத்தி முகத்தில் தடவி 30-40 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

குறிப்பு:
இந்த மாஸ்க்கைப் பயன்படுத்திய பின், உடனே வெயிலில் செல்லக்கூடாது. ஒருவேளை செல்ல வேண்டிய கட்டாயம் வந்தால், சன் ஸ்க்ரீன் எதையேனும் பயன்படுத்தி பின் செல்லுங்கள்.

மனதில் கொள்ள வேண்டியவை:
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் 10 நாட்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
முக்கியமாக சரும நிறம் இன்னும் அதிகரிக்க வேண்டுமென்று அடிக்கடி இதைப் போட வேண்டாம். இதில் பேக்கிங் சோடா இருப்பதால், தொடர்ச்சியாக பயன்படுத்தினால் சருமம் மோசமாக பாதிக்கப்படும்.



Click it and Unblock the Notifications
