Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
சீக்கிரம் கருவளையம் மறைய விளக்கெண்ணெயை எப்படியெல்லாம் யூஸ் பண்ணனும்னு தெரியுமா?
கருவளையம் சோர்வான முகத்தின் முகவரியாகத்தான் இருக்கும். எளிதில் மறையாத கருவளையத்தை விளக்கெண்ணெய் கொண்டு எப்படி போக்கச் செய்யலாம் என்பதற்காகத்தான் இந்த கட்டுரை.
கருவளையம் சரியாக தூங்காமலிருக்கும்போது, இரவில் அதிக நேரம் படித்தாலோ, கவலைகளாலோ உண்டாகும். அவை உடனடியாக மறைந்துவிட்டால் மகிழ்ச்சிதான்.
ஆனால் அவ்வளவு எளிதில் கருவளையம் மறையாது என்பதுதான் பிரச்சனையே. நீங்கள் உருளைக் கிழங்கு, வெள்ளரி என பயன்படுத்தியிருப்பீர்கள்.
எதுவுமே பயனளிக்கவில்லையென்றால் சோர்ந்து விடாதீர்கள். நிச்சயம் இந்த விளக்கெண்ணெய் ரெசிபி பயனளிக்கும். இந்த ரெசிப்பிகள் விரைவில் கருவளையத்தை போக்கச் செய்யும் என நிருபிக்கப் பட்டுள்ளது. எப்படி என பார்க்கலாம்.

விளக்கெண்ணெய் மற்றும் பால் :
தேவையானவை :
விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன்
பால் - 1 ஸ்பூன்
விளக்கெண்ணெயில் பால் கலந்து நன்றாக அடித்து கலக்குங்கள். பின்னர் அதனை கண்களைச் சுற்றிலும் பூசி 1 மணி நேரம் கழித்து கழுவவும்.

விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் :
விளக்கெண்ணெய்- 4 துளிகள்
பாதாம் எண்ணெய் - 4 துளிகள்
இரண்டையும் நன்றாக கலந்து கண்களில் பூசுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்கவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்தால் ஒரு வாரத்திலேயே மாற்றம் காணலாம்.

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் :
இரண்டையும் சம அளவு எடுத்து கலக்கிக் கொள்ளுங்கள். இதனை கண்களில் த்டவி 1 மணி நேரம் கழித்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

விளக்கெண்ணெய் மற்றும் உருளைச் சாறு :
விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன்
உருளைச் சாறு - 1 ஸ்பூன்
இந்த இரண்டையும் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். இது விரைவில் பயனைத் தரும். தொடர்ந்து பயன்படுத்தினால் அடர் கருவளையம் இருப்பவர்களுக்கு சீக்கிரம் குணமாகும்.

விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் :
கற்றாழை ஜெல்லை எடுத்து மசித்துக் கொள்லுங்கள். அதனுடன் விளக்கென்ணெயை கலந்து நன்ராக அடித்து கலந்தால் வெண்ணெய் போல் வரும். அதனை கண்களைச் சுற்றிலும் பூசுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். இதுவும் மிக விரைவில் பலன் தரும்.



Click it and Unblock the Notifications
