Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கால் வெடிப்பு உங்க தோற்றத்தை அசிங்கமா காமிக்குதா? இதை ட்ரை பண்ணிப் பாருங்களேன்!!
பாத வெடிப்பை போக்க நீங்க பலவித பயனுள்ள உபயோகமான குறிப்புகள் இக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்றாவது ஒரு நாள்...உங்கள் கால்களில் ஏன் வெடிப்பு ஏற்படுகிறது? ஏன் காய்ந்து போகிறது? என யோசித்து இருக்கிறீர்களா? கூறுகிறேன் கேளுங்கள். கண்ட மேனிக்கு மருந்தை படரவிட்டு உங்கள் பாதங்களை பாதுகாக்க நீங்கள் தவறுவதால்....இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். '
ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உண்ணுவதாலும், கால்களில் அழுக்கு சேர நீங்கள் பராமறிக்காமல் செல்வதாலும், தோல்கள் முதிர்ச்சி அடைவதனாலும் கூட உங்கள் குதிகால்கள் இவ்வாறு காணலாம் அல்லவா?
பாதங்களை பராமறிப்பது என்பது....கால்களில் ஏற்படும் வெடிப்பை மட்டும் போக்குவது கிடையாதுங்க. அத்துடன் உங்கள் கால்களை மிருதுவாகவும், மென்மையானதாகவும், வலியற்ற நடைபயணத்திற்கும் பெரிதும் உதவுகிறதாம்.

காய்கறி எண்ணெய்:
இந்த காய்கறி எண்ணெயில், வைட்டமின்களும், புரத சத்துகளும், கொழுப்பு அமிலங்களும் அதிகமிருக்க...அது உங்கள் பாதங்களில் ஏற்படும் வெடிப்பினை தவிர்க்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
அத்துடன் இந்த காய்கறி எண்ணெய்...தோள்களில் ஈரப்பதத்தினை புதுப்பிக்கவும் வல்லது என்கிறார்கள். தினந்தோரும் காய்கறி எண்ணெயை நீங்கள் உபயோகிக்க..அது உங்கள் குதிகால்களில் ஏற்படும் வெடிப்புகளிடமிருந்து காப்பதுடன் பாதங்கள் காய்ந்து போவதனையும் தடுக்கிறதாம்.

வழிமுறைகள்:
ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டோடு நீரினை ஊற்ற வேண்டும். அதன் பின்...அத்துடன் அந்த பாத்திரத்தில் காய்கறி எண்ணெயை ஒரு கப் சேர்க்க வேண்டும். அந்த எண்ணெய், கலக்கப்பட்ட நீரில் உங்கள் கால்களை நன்றாக ஊற வைக்கவேண்டும்.
ஆம், குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின் உங்கள் கால்களை குளிர்ந்த நீரினை கொண்டு துடைக்க வேண்டும்.
இந்த காய்கறி எண்ணெயை கொண்டு மட்டுமல்லாமல்...தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என பல எண்ணெய்கள் நம் பாதங்களினை பராமரிக்க பெரிதும் உதவுகிறதாம்.

சமையல் சோடா மற்றும் எப்சம் சால்ட் :
ஐந்து கரண்டி சமையல் சோடாவையும், ஐந்து கரண்டி எப்சம் உப்பையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலந்துகொள்ளவும். அத்துடன் அந்த பாத்திரத்தில் மிதமான சூட்டுடன் இருக்கும் தண்ணீரையும் சேர்க்க வேண்டும். இந்த நீரினை கொண்டு கால்களை நன்றாக ஊர வைக்க வேண்டும்.
சுமார் 30லிருந்து 40நிமிடம் வரை இந்த தண்ணீரில் ஊரை வைத்து...பின் குளிர்ந்த நீரினை கொண்டு நன்றாக துடைக்க வேண்டும். அவ்வாறு நன்றாக துடைத்து உங்கள் பாதத்தில் இருக்கும் ஈரப்பதத்தை அகற்ற...எப்சம் உப்பு உங்கள் தோலை விட்டு நீங்கி...வறண்டு போவதுடன் காய்ந்து போவதனையும் தடுக்கிறது.

க்ரீன் டீ கொண்டு ஊற வைப்பது எப்படி?
க்ரீன் டீ கொண்டு உங்கள் கால்களை ஊறவைப்பதன் மூலம்...குதிகால்கள் காய்ந்துபோவதனை மற்றும் வெடிப்பு ஏற்படுவதனை தடுப்பதுடன் பாதங்களில் ஏற்படும் துற்நாற்றத்தையும் இது அகற்றுகிறது.
பச்சை தேயிலை இலைகள் சில எடுத்து, அதனை நீரில் போட்டு நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். அத்துடன் சிறிது குளிர்ந்த நீரினை கலந்து பாதங்களை நன்றாக ஊற வைக்க வேண்டும். ஒரு நாளில் இரண்டு முறை பின்பற்றி தொடர்ந்து வர, உங்கள் பாதங்களில் ஏற்படும் உலர்தன்மை தடுக்கப்பட்டு, கால்களின் துர் நாற்றமும் உங்களை விட்டு செல்கிறது.

எழுமிச்சை சாறு நீரினை கொண்டு ஊற வைப்பது எப்படி?
பத்து கரண்டி எழுமிச்சை சாறினை எடுத்துகொண்டு...அதில் ஒரு கரண்டி சமையல் சோடாவை சேர்க்க வேண்டும். அத்துடன் ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து மிதமான சூட்டோடு இருக்கும் நீரினை அவற்றுள் ஊற்ற வேண்டும்.
அதன் பிறகு உங்கள் பாதங்களை இருபது நிமிடத்திற்கு நன்றாக அந்த நீரில் ஊறவைத்து...குளிர்ந்த நீரினை கொண்டு..உங்கள் பாதங்கள் உலர்ந்து போகும்வரை துடைக்க வேண்டும். இந்த எழுமிச்சை சாறு நீரினைகொண்டு ஊறவைப்பதன் மூலம்...
தோள்களும் பிரகாசிக்கிறது என்பது ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...' என்ற பழமொழியை நமக்கு நினைவூட்டி உற்சாகத்தில் துள்ளி குதிக்க வைத்து எழுமிச்சையை தேடி அலைகிறது நம் கால்கள்.

பால் மற்றும் தேனை கொண்டு பாதங்களை பராமரிப்பது எப்படி?
பால், தேவைக்கேற்ப இரண்டிலிருந்து மூன்று கப் வரை எடுத்துகொள்ள வேண்டும். அதனை பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் ஒரு கப் தேனை சேர்க்க வேண்டும். மேலும் அதோடு... கண்ணீர் பெருக்கி (கிளிசரின்) சில கரண்டிகள் சேர்க்க வேண்டும்.
அந்த நீரினை கொண்டு உங்கள் பாதங்களை நன்றாக ஊறவைத்து சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினை கொண்டு பாதங்களை நன்றாக கழுவவேண்டும். நீங்கள் எடுக்கும் பால்... கச்சா குளிர்ந்த பாலாக இருக்க வேண்டியது அவசியம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
அதேபோல் நாம் எடுக்கும் நீரின் தன்மை, சூடானதாகவோ இல்லையென்றால்...மிதமான சூட்டுடனோ இருக்க வேண்டியது அவசியமாகும்.

புதினா மற்றும் பச்சை தேனீர் நீரினை கொண்டு எப்படி ஊற வைப்பது?
புதினா இலைகளை உங்கள் கைகளில் எடுத்துகொள்ளுங்கள். அதனை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். சிறிது நேரத்திற்கு பின் அனலை அணைத்து... அந்த நீரினை உலர விடுங்கள்.
இப்பொழுது புதினா இலைகள் போடப்பட்ட தண்ணீரில்...2 அல்லது 3 கரண்டி பச்சை தேயிலை இலைகளை அதோடு சேர்த்துகொள்ளுங்கள். அதன் பின்னர்...ஒரு கரண்டி தேனை சேர்த்து நன்றாக கலக்கிகொள்ளவும். இப்பொழுது அந்த நீரினை கொண்டு உங்கள் பாதங்களை நன்றாக ஊற வையுங்கள்.

சந்தனக்கட்டைகளை கொண்டு உங்கள் பாதங்களை ஊறவைப்பது எப்படி?
முதலில் ஐந்து கரண்டி அத்தியவாசிய சந்தனக்கட்டை எண்ணெயை எடுத்துகொள்ள வேண்டும். அத்துடன் கால் (1/4) கப்... எப்சம் உப்பினை எடுத்துகொள்ள வேண்டும்.
அவற்றுள் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதன் பிறகு உங்கள் பாதங்களை அந்த நீரில் நன்றாக ஊறவைத்து காத்திருக்கவும்.
அதுமட்டுமல்லாமல் கால்களில் ஏற்படும் வெட்டுக்காயம் மற்றும் இதர காயங்களுக்கும் இந்த சந்தனக்கட்டைகளின் பயன்பாடு இன்றியமையாததாக அமைந்து நம்மை காப்பாற்றுகிறது.



Click it and Unblock the Notifications











