ஒரே ஒரு குறிப்பு இரண்டு விதமான பயன்படுத்தலாம்! எப்படி தெரியுமா?

Posted By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

உங்கள் முகத்தை அழகாக்க எல்லா இயற்கை பொருட்களையும் சேர்த்து ஒரு பேஸ் பேக் தயாரிக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான ஸ்மூத்தி ட்ரிங் ரெசிபி தயாரிக்க வேறொரு குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.

இப்படி விதவிதமாக தனித்தனியாக உங்கள் சருமத்தை கவனித்தாலும் கடைசியில் என்னமோ எந்த ஒரு பலனும் இல்லாமல் போய் விடுகிறது அல்லவா.

எனவே தான் உங்களுக்காக ஒரே ஒரு டிப்ஸ் உங்கள் பேஸ் பேக்காவும் மற்றும் ஸ்மீத்தியாகவும் போன்ற இரண்டு விதமான வேலைகளை செய்கிறது.

இதற்கு பயன்படும் முதல் பொருள் யோகார்ட். இதனுடன் சில பொருட்களை சேர்க்கும் போது பேஸ் பேக் மற்றும் ஸ்மீத்தி ட்ரிங்காகவும் செயல்படுகிறது. உங்கள் பேஸ் பேக் காயும் வரை இந்த ஸ்மீத்தி ட்ரிங் குடிங்க. இரண்டும் சேர்ந்து ஒரு நல்ல பலனை கொடுக்கும்.

சரி வாங்க இப்போ இதை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஃபேஸ் பேக் ரெசிபி

ஃபேஸ் பேக் ரெசிபி

தேவையானவை :

கிரேக் யோகார்ட் /ஹங் யோகார்ட்

எலுமிச்சை சாறு

2 டேபிள் ஸ்பூன் தேன்

மிக்ஸி

 செய்முறை :

செய்முறை :

முதலில் மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்டை போட்டு கொள்ள வேண்டும். பிறகு 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸை பிழிய வேண்டும்.

அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.அதை நன்றாக அரைத்தால் உங்க பேஸ் பேக் ரெடி. கலவையானது மிகவும் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் மஞ்சளை இதனுடன் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.

ஸ்மூத்தி ரெசிபி

ஸ்மூத்தி ரெசிபி

தேவையானவை :

வாழைப்பழம்

பாதாம் பால்

செய்முறை

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள ஃபேஸ் பேக் பொருட்களை எடுத்து அவற்றில் பிசைந்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும் .

கொஞ்சம் நேரம் கழித்து பாதாம் பால் சேர்க்கவும்

உங்கள் ஸ்மூத்தி ட்ரிங் இனிப்பாக இருக்க நினைத்தால் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.

நன்றாக கலக்கி விட்டால் உங்க ஸ்மீத்தி ட்ரிங் ரெடி

இன்னும் அதிகமான சுவை வேண்டுமென்று நினைத்தால் பிரிட்ஜில் குளிர வைத்து பருகவும்.

குறிப்பு

குறிப்பு

இந்த பேஸ் பேக் மற்றும் ஸ்மூத்தி ட்ரிங் ரெசிபியை உடனடியாக பயன்படுத்தி கொள்ளவும். வைத்திருந்து ரெம்ப நாள் கழித்து பயன்படுத்த கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Two In One: Face Pack Plus Smoothie Recipe

Two In One: Face Pack Plus Smoothie Recipe
Story first published: Saturday, August 5, 2017, 11:30 [IST]