For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரும பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும் மூலிகை இலை..!

சரும பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும் மூலிகை இலை..!

By Lakshmi
|

நமது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளின் பயன்கள் நமக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. நமது வீட்டின் அருகிலேயே வளர்ந்திருக்கும் இந்த குப்பை மேனி செடியானது, ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த குப்பை மேனி இலையை சருமத்திற்கு பயன்படுத்துவதால், சருமம் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மேலும், சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகள், பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றிற்கும் பல வகையான சரும பிரச்சனைகளுக்கும் இந்த குப்பை மேனி இலை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில சரும நோய்களுக்கும் பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குட்டி மீசை தொல்லையா?

குட்டி மீசை தொல்லையா?

உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம். குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து,விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

கரும்புள்ளிகளுக்கு

கரும்புள்ளிகளுக்கு

குப்பை மேனி இலையுடன் மஞ்சள்,வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும்புள்ளிகள் மீது தடவி வர சருமம் முன்பு இருந்த இயல்பானதாக இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

முடி வளர்ச்சி தடைபடும்

முடி வளர்ச்சி தடைபடும்

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்திர் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி செய்தால் முகம் அழகு கொடுக்கும்.

சொறி சிரங்கு

சொறி சிரங்கு

குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி சிரங்கு படை குணமடையும். எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். மேனி அழகு கூடும். பளிச்சென்ற தோற்றம் கிடைக்கும்.

தோல் நோய்கள் குணமாக

தோல் நோய்கள் குணமாக

குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்

உடல் அழகிற்கு...

உடல் அழகிற்கு...

10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, உடல் அழகும், ஆரோக்கியமும் ஏற்படும்.

தீக்காயங்களுக்கு..

தீக்காயங்களுக்கு..

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy Grandma Remedies for Skin Problems

Easy Grandma Remedies for Skin Problems
Story first published: Saturday, December 16, 2017, 16:23 [IST]
Desktop Bottom Promotion