Latest Updates
-
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
முக கருமையைப் போக்க தக்காளியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்?
இங்கு சரும கருமையைப் போக்க சமையலறையில் உள்ள தக்காளியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.
வெயில் அதிகம் கொளுத்துவதால், பலரது சரும நிறமும் கருமையாகி இருக்கும். இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க எத்தனையோ க்ரீம்கள், லோசன்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை தற்காலிக பலனைத் தருவதோடு, சரும செல்கள் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும்.

ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும கருமை நீங்குவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக தக்காளியைக் கொண்டு சருமத்திற்கு பராமரித்து கொடுப்பது, இருப்பதிலேயே மிகவும் அற்புதமான வழியாகும்.
இங்கு சரும கருமையைப் போக்க சமையலறையில் உள்ள தக்காளியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

தக்காளி மற்றும் தேன்
ஒரு தக்காளியை அரைத்து, அத்துடன் 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் அவகேடோ
1 தக்காளியை கூழ் போன்று அரைத்து, அத்துடன் 1 அவகேடோ பழத்தை மசித்து சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தினமும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சரும கருமை நீங்குவதோடு, வறட்சியும் நீங்கும்.

தக்காளி மற்றும் ஆலிவ் ஆயில்
ஒரு தக்காளி கூழுடன், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 ஸ்பூன் ஜொஜோபா ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் தயிர்
1 தக்காளியை அரைத்து, அதில் சிறிது தயிர், 1 ஸ்பூன் தேன் மற்றும் 1/2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும நிறம் மேம்படுவதைக் காணலாம்.

தக்காளி மற்றும் ஓட்ஸ்
ஒரு தக்காளி கூழுடன், 1 ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் கிவி
1 தக்காளி மற்றும் பாதி கிவி பழத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் 1 ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் கற்றாழை
1 தக்காளியை அரைத்து கூழ் எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
