உங்கள் முகம் அழகு பெற குங்குமப் பூவை எப்படி பயன்படுத்தலாம் ?

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

சரும பராமரிப்புக்கு ஒரு இயற்கையான பொருள் மிகவும் புகழ் பெற்றது என்றால் அது குங்குமப் பூ ஆகும். இருப்பினும் இது மார்க்கெட்டில் முந்தைய காலத்தில் இருந்து இருந்தாலும் தற்போது இதன் சருமத்திற்கான பயன்கள் நிறைய பேர் கவனத்தை ஈர்த்துள்ளது.

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்!!

குங்குமப் பூ கேசார் என்றும் அழைக்கப்படுகிறது. இது எல்லா நாட்டிலும் கிடைக்கக் கூடிய பொருளாகும். இதனுடன் சரியான பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் சருமத்தில் ஒரு மேஜிக் நிகழும்.

குங்குமப் பூ நிறைய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. இது சருமத்தை அழகாக்குகிறது. இதை பயன்படுத்தி செய்யும் பேஸ் மாஸ்க்களை பார்ப்பதற்கு முன்னால் குங்குமப் பூவின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளவோம்.

Different Saffron Face Masks You Should Try At Home

சருமத்திற்கான குங்குமப் பூவின் நன்மைகள்

சருமம் பொலிவாகுவதை அதிகரிக்கிறது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது, எண்ணெய் பசை சருமத்தை சரி செய்கிறது, சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது. சருமம் இளமையாக இருக்க உதவுகிறது, சருமம் வயதாகுவதற்கு எதிராக செயல்படுகிறது. சரும நிறத்திட்டுகளை குணமாக்குகிறது

சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் கறைகளை போக்குகிறது.

இப்பொழுது குங்குமப் பூவின் நன்மைகள் பற்றிய தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும். சரி வாங்க இப்பொழுது அதை பயன்படுத்தி பேஸ் மாஸ்க்களை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.எண்ணெய் சருமம் :

1.எண்ணெய் சருமம் :

நீங்கள் உங்கள் எண்ணெய் சருமத்தை போக்க விரும்பினால் இந்த பேஸ் மாஸ்க் உங்களுக்கு மிகவும் சிறந்தது. சில குங்குமப் பூவை எடுத்து கொண்டு அதை சில நேரம் தயிரில் ஊற வைக்க வேண்டும் அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் கலந்து தயிரானது குங்குமப் பூவால் மஞ்சள் கலராகும் வரை காத்திருக்க வேண்டும்.

பிறகு இதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும்.

 2.சாதாரண சருமம்

2.சாதாரண சருமம்

உங்கள் சாதாரண முகத்தை அழகாக்க இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்த வேண்டும். சில ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும்.

பிறகு 2-3 குங்குமப் பூவை போட்டு அந்த மாஸ்க்கை முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். ஸ்ட்ராபெர்ரியில் நிறைய விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் இருப்பதால் உங்கள் சருமம் இளமையாகவும் பொலிவாகவும் இருக்க உதவுகிறது.

3.காம்பினேஷன் சருமத்திற்கு

3.காம்பினேஷன் சருமத்திற்கு

காம்பினேஷன் சருமத்தை பராமரிப்பது மிகவும் கடினம். உங்களது சருமம் சில நேரங்களில் வறண்டும் சில நேரங்களில் எண்ணெய்யாகவும் இருக்கும். இந்த குங்குமப் பூ பேஸ் மாஸ்க் உங்களுக்கு மிகவும் சிறந்தது.

2-3 டேபிள் ஸ்பூன் கடலைமாவு மற்றும் சிறிது குங்குமப் பூவை எடுத்துக் கொண்டு கொஞ்சம் பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினமும் பயன்படுத்துவதால் மாசுமருவற்ற பொலிவான சருமம் கிடைக்கும்.

4.வறண்ட சருமம்

4.வறண்ட சருமம்

இந்த வகை பேஸ் மாஸ்க் உங்கள் சருமத்தில் உள்ள தீவிர பிரச்சினைகளை சரி செய்து நல்ல ஜொலிப்பான முகத்தை தருகிறது. 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி அதனுடன் பால் சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு சிறிது குங்குமப் பூ சேர்த்து இந்த கலவையை ஒரு மணி நேரத்துக்கு விட்டு விட வேண்டும். பிறகு இதை முகத்தில் தடவி 30-40 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த மாஸ்க் உங்கள் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. உங்கள் சருமத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடும்.

5 . எண்ணெய் சருமம் :

5 . எண்ணெய் சருமம் :

உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தினால் நல்ல பலனை காணலாம். சிறிது குங்குமப் பூ எடுத்து அதை பாலில் ஊற வைக்க வேண்டும்.

பிறகு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்தால் கெட்டியான பதம் கிடைக்கும். நன்றாக கலந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த மாஸ்க் எரிச்சல் மற்றும் சிவந்த சருமத்தை சரி செய்வதற்கு ஏற்றது.

6.முகப்பரு சருமத்திற்கு (குங்குமப் பூ மற்றும் பால்)

6.முகப்பரு சருமத்திற்கு (குங்குமப் பூ மற்றும் பால்)

1/4 கப் பாலுடன் 3-4 குங்குமப் பூ சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இந்த பாலை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.

பால் உங்கள் சருமத்தை சுத்தமாக்கி பொலிவாக்குகிறது. குங்குமப் பூ உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கி அழகுறச் செய்கிறது. உங்களது சருமம் பால் பொருட்களால் அழற்சி ஆகும் என்றால் இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

7. சரும நிறத்திற்கு (குங்குமப் பூ மற்றும் சூரிய காந்தி விதைகள்)

7. சரும நிறத்திற்கு (குங்குமப் பூ மற்றும் சூரிய காந்தி விதைகள்)

4-5 சூரிய காந்தி விதைகளுடன் 3-4 குங்குமப் பூவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பாலில் ஊற வைத்து ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

பிறகு பால் மஞ்சள் கலராக மாறியதும் இதையெல்லாம் மிக்ஸியில் போட்டு அரைத்து முகத்தில் தடவி உலர விட்டு பிறகு நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினால் உங்கள் சருமம் அழகான நிறத்தை பெறும்.

இந்த குங்குமப் பூ பேஸ் மாஸ்க்களை நீங்களும் பயன்படுத்தி அழகான சருமம் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different Saffron Face Masks You Should Try At Home

Different Saffron Face Masks You Should Try At Home
Story first published: Wednesday, July 5, 2017, 8:00 [IST]
Subscribe Newsletter