For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதட்டின் நிறம் சிவப்பாக மாறிட உதவும் அழகுக் குறிப்புகள்!!

சிவப்பான உதடு பெற நீங்கள் வீட்டிலிருந்த படி செய்யக் கூடிய பயனளிக்கும் குறிப்புகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

முக வசீகரத்தை அதிகரிக்கை செய்வதில் முக்கிய பங்கு இதழில் தவழும் புன்னகைக்கு உண்டு என்பது மறுப்பதற்கு இல்லை. புன்னகையை சுமக்கும் உதடுகள் கருமையாக அல்லது அடர்ந்த நிறத்தில் இருப்பதை யாரும் விரும்புவதில்லை.

அழகான பிங்க் நிற உதடுகளை தான் அனைவருக்கும் பிடிக்கும். இத்தகைய உதடுகள் இல்லாத பெண்கள் பொதுவாக உதட்டு சாயம் மூலம் தற்காலிக அழகை பெற்று கொள்கிறார்கள்.

Best ways to get pink lips

உதடுகள் கருமையாக இருக்க பல காரணங்கள் உண்டு. அவை சூரிய ஓளி நேரடியாக முகத்தில் படுவது, பருவ நிலை மாற்றம், குறைந்த இரத்த ஓட்டம், மனச்சோர்வு, உதட்டுச்சாயத்தை அழிக்க மறப்பது, புகை பிடிப்பது, புகையிலை பழக்கம் போன்றவை.

உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க அதனை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும். இதற்கான செலவு ஒன்றும் அதிகமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொன்டே உதட்டின் நிறத்தை பராமரிக்கலாம். உதடுகளை பராமரிக்கும் முறைகளை பற்றி இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈரப்பதம் :

ஈரப்பதம் :

செபம் என்ற ஒரு வகை எண்ணெய் உதட்டில் உள்ளது. உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க அதனை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது முக்கியம்.

வெளியில் செல்லும்போது உதட்டுக்கு பெட்ரோலியம் ஜெல்லி அல்லது லிப் பாம் தடவுவது நல்ல பலனை கொடுக்கும். வீட்டிற்குள் இருக்கும்போது கொக்கோ பட்டர் தடவலாம்.

பால் மற்றும் மாதுளை விதைகள்:

பால் மற்றும் மாதுளை விதைகள்:

மாதுளை விதைகள் மூலம் உதட்டிற்கு பிங்க் நிறத்தை உரித்தாக்கலாம் . பால் க்ரீமுடன் சிறிது மாதுளை விதைகளை சேர்த்து அரைத்து உதட்டில் தடவலாம். சில நாட்களில் உங்கள் உதடுகள் பிங்க் நிறமாவதை உணரலாம். இதற்கு பக்க விளைவுகள் ஏதும் இல்லை.

வெள்ளரிக்காய் சாறு:

வெள்ளரிக்காய் சாறு:

சிறிய அளவு வெள்ளரிக்காய் சாறை உதட்டில் தடவுவதால் அதன் கருமை விலகும். அல்லது வெள்ளரிக்காயை நறுக்கி, உதட்டில் வைத்து தேய்க்க வேண்டும். அதன் சாறு உதட்டில் படும்படி இதனை செய்ய வேண்டும். 5 நிமிடங்கள் இதனை தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

 ரோஜா இதழ்களும், பாலும்:

ரோஜா இதழ்களும், பாலும்:

இதழின் நிறத்தை கூட்ட, ரோஜா இதழை பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை சிறிது நேரம் பாலில் ஊறவைக்கவும். பின்பு அதனை சில துளி க்ளிசரின் மற்றும் சில துளி தேனுடன் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை உதட்டில் தடவவும். பாலால் உதட்டை சிறிது நேரம் நன்றாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் அற்புதமான தீர்வை பெறலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு:

எலுமிச்சையை பாதியாக நறுக்கவும். நறுக்கிய ஒரு பாதி பழத்தில், சிறிது சர்க்கரையை தூவவும். பிறகு அந்த பாதி பழத்தை கொண்டு உதடுகளில் நன்றாக தேய்க்கவும். இதனை தொடர்ந்து செய்து வரவும். எலுமிச்சை சிறந்த ஒரு ப்ளீச் ஆகும். சர்க்கரை உதட்டில் இருக்கும் இறந்த வெல்களை நீக்கி, உதட்டிற்கு பொலிவை தரும்.

மஞ்சள் தூள் மற்றும் பால்:

மஞ்சள் தூள் மற்றும் பால்:

மஞ்சள் தூள், கடலை மாவு மற்றும் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்டை உங்கள் உதட்டில் தடவவும். கடலை மாவு உதட்டிற்கு வறட்சியை தரும். வறண்ட சருமம் உள்ளவர்கள், கடலை மாவை பயன்படுத்தவேண்டாம்.

பிரஷ்

பிரஷ்

இரவில் உறங்குவதற்கு முன் பல் தேய்க்கும் வழக்கம் உள்ளவர்கள், பற்களை தேய்த்த பின், உதடுகளை ப்ரஷால் மென்மையாக தேய்க்கலாம். இதனால் உதட்டில் படிந்திருக்கும் வறண்ட தோல் நீக்கப்பட்டு புதிதாகவும் அழகாகவும் தோன்றும்.

ஒப்பனைகள்:

உதட்டின் நிற மாற்றத்துக்கு முக்கியமான ஒரு காரணம், பகலில் ஒப்பனைகள் செய்பவர்கள், இரவில் உறங்குவதற்கு முன் அதனை நீக்காமல் உறங்குவதாகும். உறங்குவதற்கு முன் மறக்காமல் சிறிது ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயை ஒரு பஞ்சில் நனைத்து உதட்டில் மென்மையாக தடவிய பிறகு உறங்க செல்லுங்கள்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்யுடன் சில துளி தேன் மற்றும் சர்க்கரையை கலந்து உதட்டில் தடவலாம். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவதால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best ways to get pink lips

Best ways to get pink lips
Story first published: Thursday, September 28, 2017, 14:40 [IST]
Desktop Bottom Promotion