பொடுகினால் வரும் முகப்பருக்களை போக்க சில டிப்ஸ்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நம்மில் பலருக்கும் முகப்பரு பொடுகினால் உண்டாகும். தலையில் பொடுகு இருந்தால் தலை மட்டுமில்லாமல், முக அழகும் கெட்டு போகும். முகப்பரு போவதற்காக சில விஷயங்களை செய்து விட்டு தலையில் உள்ள பொடுகிற்காக எதுவுமே செய்யாமல் இருப்பது ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியாது.

இந்த பொடுகினால் உண்டாகும் முகப்பருக்களில் இருந்து விடுதலை பெற நீங்கள் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகு ஷாம்பு

பொடுகு ஷாம்பு

வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது பொடுகிற்காக போடும் ஷாம்புவினால் தலையை அலச வேண்டும். காதுகள், முடியின் வேர்பகுதி, என அனைத்தையும் ஷாம்புவினால் சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும்.

தலைக்கு நேராக நின்று கொண்டு ஷாம்பு உபயோகிக்க கூடாது. அவ்வாறு செய்தால் தலையில் உள்ள பொடுகு நெற்றியில் படிந்து பொடுகை உண்டாக்கிவிடும். எனவே குனிந்து கொண்டு தலையை அலச வேண்டும்.

கண்டிஷனர்

கண்டிஷனர்

நீங்கள் தலைக்கு கண்டிஷனர் உபயோகப்படுத்துபவராக இருந்தால், முடிக்கு மட்டும் கண்டிஷனரை உபயோகப்படுத்த வேண்டும். முடியின் வேர்க்கால்களுக்கு கண்டிஷனரை உபயோகப்படுத்த கூடாது. அதை நீங்கள் சுத்தமாக அலசாமல் விட்டுவிட்டால் தலையில் பொடுகு அதிகரித்துவிடும்.

முடியை ஒதுக்கியே வைக்கவும்

முடியை ஒதுக்கியே வைக்கவும்

உங்களது தலையில் பொடுகு இருந்தால், தலை முடியை முகத்தில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தலைமுடி முகத்தில் பட்டால் முடியில் உள்ள பொடுகும் முகத்தில் படிந்து பருக்களை உண்டாக்கும்.

ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ்

தலைமுடியை மிதமான சூடுள்ள ஆயிலை கொண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது நன்றாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் தலையில் உள்ள வறண்ட பொடுகுகள் நீங்கும்.

முகம்

முகம்

அடிக்கடி முகத்தை கழுவுவது சிறந்தது. குறைந்தது தினமும் இரண்டும் முறையாவது முகத்தை கழுவினால் முகம் எண்ணெய் பசை இல்லாமலும், முகப்பருக்கள் இல்லாமலும் இருக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மையானது உங்களது முடியின் வேர்கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எலுமிச்சை சாற்றை தலைமுடியின் வேர்கால்களில் நன்றாக தேய்த்து 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள நீரில் நன்றாக கழுவ வேண்டும். இதனால் பொடுகும் போகும். முகத்தில் உள்ள பருக்களும் நீங்கி, முகம் அழகாக மாறும்.

தலைவாருதல்

தலைவாருதல்

தினமும் அதிக அழுத்தம் இல்லாமல், தலைவாருவதால் தலையில் உள்ள இறந்த செல்கள் அகன்றுவிடுகின்றன. தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் பொடுகு பிரச்சனை நீங்குவது மட்டுமில்லாமல், முடியும் நன்றாக வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best tips to get rid of acne due to dandruff

Best tips to get rid of acne due to dandruff
Story first published: Wednesday, July 19, 2017, 13:30 [IST]