For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் முகம் சிவப்பழகு பெறனுமா!! அப்போ இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்க !!

சிவப்பழகை தரும் இந்த பேஸ் மாஸ்க்கை இரவில் பயன்படுத்தி வந்தால் பியூட்டி பொருட்கள் இல்லாத விலையே இல்லாதே அழகை இயற்கையாகவே பரிசளிக்கும். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு

By Suganthi Rajalingam
|

இந்த காலத்தில் பெண்கள் தங்கள் முகத்தை சிவப்பாக நிறமேற்றுவதற்கும் அழகாக மெருகேற்றுவதற்கும் நிறைய பியூட்டி பொருட்களை வாங்கி நிறைய பணத்தை செலவழிக்கின்றனர். ஆனால் அதற்கு கிடைக்கும் ரிசல்ட் என்னவோ நமக்கு திருப்தி அளிப்பதாக இருப்பதில்லை.

2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

ஆனால் உங்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை வழங்கும் இந்த பேஸ் மாஸ்க் கண்டிப்பாக நல்ல பலனை அளிக்கும். இந்த பேஸ் மாஸ்க்கை இரவில் பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமம் நிறமேறுவதுடன் அழகாகவும் பொலிவாகவும் மாறும். பியூட்டி பொருட்கள் இல்லாத விலையே இல்லாதே அழகை இயற்கையாகவே பரிசளிக்கும்.

Best DIY Overnight Face Masks For Getting Fair Skin

பொதுவாக நம்ம முகம் கருப்பாக மாறுவதற்கு இரண்டு காரணங்களான சரும நிறமாற்றம், சன் டேன் ஆகியவை காரணம் ஆகும். இந்த பேஸ் மாஸ்க் இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒழித்துக்கட்டி நமக்கு சிவப்பழகை கொடுக்கிறது.

இந்த பேஸ் மாஸ்க்கில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ளீச்சிங் ஏஜென்ட் சருமம் சிவப்பழகை பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரவு நேர முழுவதும் இதை முகத்தில் போட்டு இருப்பதால் சரும துளைகளில் ஊடுருவி ஒரு சிறந்த நன்மைகளை கொடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ் மாஸ்க்

1.வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ் மாஸ்க்

உங்கள் முகம் சிவப்பழகு பெறுவதை இந்த பேஸ் மாஸ்க் இரவிலேயே தனது வேலையை செய்து விடுகிறது. இதை வாரம் ஒரு முறை இரவு நேரத்தில் பயன்படுத்தி வந்தால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

1 பழுத்த வாழைப் பழம்

1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

செய்முறை

பழுத்த வாழைப்பழத்தை ரோஸ் வாட்டருடன் சேர்ந்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதை நன்றாக முகத்தில் அப்ளே செய்ய வேண்டும் . இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

2.யோகார்ட் மற்றும் வெள்ளரிக்காய் பேஸ் மாஸ்க்

2.யோகார்ட் மற்றும் வெள்ளரிக்காய் பேஸ் மாஸ்க்

இந்த இரண்டு பொருட்களும் சருமம் சிவப்பழகை பெறும் பொருட்களை கொண்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை என்று இந்த மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக சிவப்பழகை பெறுவீர்கள்.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

2 நறுக்கிய வெள்ளரிக்காய்

செய்முறை

நறுக்கிய வெள்ளரிக்காயை நன்றாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

3.லெமன் ஜூஸ் மற்றும் தேன்

3.லெமன் ஜூஸ் மற்றும் தேன்

இதில் சரும நிறத்தை மெறுகேற்றும் பொருளுடன் சரும ப்ளீச்சிங் பொருட்களும் அடங்கியுள்ளன. எனவே இதை இரவு நேரத்தில் பயன்படுத்தும் போது நல்ல நிற மாற்றத்தையும் ஆரோக்கியமான சருமத்தையும் கொடுக்கிறது.

தேவையான பொருட்கள்

1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

1 டேபிள் ஸ்பூன் தேன்

செய்முறை

லெமன் ஜூஸ் தயாரித்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து கொள்ளவும் . இந்த மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவ வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும்

4. மஞ்சள் தூள் மற்றும் ஆலிவ் ஆயில்

4. மஞ்சள் தூள் மற்றும் ஆலிவ் ஆயில்

இந்த இரண்டு பாரம்பரிய மருத்துவ பொருட்களும் சருமத்திற்கு நிறத்தை தருவதோடு சரும கரும்புள்ளிகள் மற்றும் ஆரோக்கியமான சருமம் கிடைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் அழகு பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் ஒரு முறை இரவு நேரத்தில் பயன்படுத்தி வந்தால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

தேவையான பொருட்கள்

1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்

1டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும். முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளே செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும் . காலையில் எழுந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும்

5. பால் பவுடர் மற்றும் பாதாம் எண்ணெய்

5. பால் பவுடர் மற்றும் பாதாம் எண்ணெய்

இரவு முழுவதும் அப்படியே அப்ளே செய்து இந்த மாஸ்க்கை விட்டு விடுவதால் நல்ல ப்ளீச்சிங் செய்து சருமத்தின் நிறத்தை மெறுகேற்றுகிறது. வாரமுறையில் இதை பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம்.

தேவையான பொருட்கள்

1/2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்

1 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்

6.ஸ்ட்ரா பெர்ரி மற்றும் க்ரீன் டீ

6.ஸ்ட்ரா பெர்ரி மற்றும் க்ரீன் டீ

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பொருட்கள் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனுடன் க்ரீன் டீ சேர்க்கும் போது முகத்தில் உள்ள அழுக்குகளையும் நீக்கி சருமம் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1 பழுத்த ஸ்ட்ராபெர்ரி

1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ

செய்முறை

ஸ்ட்ராபெர்ரியை நன்றாக அரைத்து கொள்ளவும். அதனுடன் க்ரீன் டீ சேர்க்கவும். கொஞ்சம் டீ குளிரும் வரை காத்திருக்கவும். இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும். முகம் மற்றும் கழுத்தில் நன்றாக மாஸ்க்கை அப்ளே செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும்

7.சீரகம் மற்றும் தர்பூசணி மாஸ்க்

7.சீரகம் மற்றும் தர்பூசணி மாஸ்க்

7.சீரகம் மற்றும் தர்பூசணி மாஸ்க்

இந்த இரண்டு பொருட்களிலும் சருமத்தை சிவப்பாக்கும் பொருட்கள் இருக்கின்றன. வார முறையில் இந்த பேஸ் மாஸ்க்களை அப்ளை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடியளவு சீரகம்

1 டீ ஸ்பூன் தர்பூசணி ஜூஸ்

செய்முறை

ஒரு பெளலில் சீரகத்தை ஊற வைத்து கொள்ளவும். இதனுடன் தர்பூசணி ஜூஸ் சேர்த்து கொள்ளவும். நன்றாக கலக்கி முகத்தில் அப்ளே செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ் மாஸ்க்களை வார முறையில் இரவு நேரத்தில் பயன்படுத்தி வந்தால் உங்கள் சரும நிறம் மெறுகேறி இருப்பதை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best DIY Overnight Face Masks For Getting Fair Skin

Best DIY Overnight Face Masks For Getting Fair Skin
Story first published: Friday, August 18, 2017, 13:04 [IST]
Desktop Bottom Promotion