சாக்லேட் எப்படி உங்களுக்கு சூப்பர் அழகை தரும் தெரியுமா?

Posted By: Aashika
Subscribe to Boldsky

சாக்லேட் பெரும்பாலானோர் விரும்பி உண்பர். இது நம் மூளையை சுறுசுறுப்பாக்கி உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவிடுகிறது. அத்துடன் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சாக்லேட்டின் மூலப்பொருளான சாக்கோ பீன்ஸில் மக்னீஸியம் நிறைய இருக்கிறது. இதனால் சருமத்திற்கு என்னென்ன பயன்கள் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லேட் மாஸ்க் :

சாக்லேட் மாஸ்க் :

டார்க் சாக்லேட்டை வாங்கி, அதனை சூடாக்கி மெல்ட் செய்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் மெல்டட் சாக்லேட், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்களில் கழுவி விடலாம்.

Image Courtesy

சாக்லேட் சிரப் :

சாக்லேட் சிரப் :

கோக்கோ பவுடரை சூடாக்குங்கள். சிறிதளவு கல் உப்பையும் சேர்த்து நன்றாக கிளறுங்கள். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் உப்பு, நம் சருமங்களில் உள்ள இறந்த செல்களை நீக்கிடும். இத்துடன் இரண்டு ஸ்பூன் பாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

 சாக்லேட் பெடிக்கியூர் :

சாக்லேட் பெடிக்கியூர் :

ஆரோக்கியமான சருமம் வேண்டுபவர்கள் தாராளமாக சாக்லேட் பயன்படுத்தலாம். வறண்டு பித்த வெடிப்புகளுடன் இருக்கும் கால்களுக்கு பெடிக்கியூர் செய்யும் போது சாக்லேட் பயன்படுத்தினால் சாஃப்ட்டாக மாறும்.

சாஃப்ட்டான சருமத்திற்கு :

சாஃப்ட்டான சருமத்திற்கு :

சாக்லேட் சிரப்புடன் எஸன்சியல் ஆயில், கிளசரின், விட்டமின் ஆயில் சேர்த்து சருமத்தில் தடவி வந்தால் அவை நம் சருமத்தை சாஃப்ட்டாக மாற்றும் அத்துடன் டேனையும் நீக்கிடும்.

சாக்லேட் லிப் பால்ம் :

சாக்லேட் லிப் பால்ம் :

உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பெரிதும் உதவிடும். வறண்டு தோல் உரிவது இதனால் தவிர்க்கப்படும். சாக்லேட் சிரப்பை ஒரு நாளில் இரண்டு முறை உதடுகளில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள்.

Image Courtesy

 சாக்லேட் பாடி வாஷ் :

சாக்லேட் பாடி வாஷ் :

சாக்லேட் குளியல் இது உடலில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீக்க உதவிடும். அத்துடன் எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் தோல் சம்பந்தமான நோய்கள் வருவது குறைவது, அதீத வியர்வை, அரிப்பு போன்றவை தவிர்க்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Chocolate For Skin

Learn,How chocolate helps us to improve our skin tone.
Story first published: Saturday, July 22, 2017, 11:30 [IST]