எந்த பழம் எந்த சரும பிரச்சனைக்கு மருந்தாகிறது? பழங்களின் அற்புத அழகுக் குறிப்புகள்!!

Posted By:
Subscribe to Boldsky

பழங்கள் இளமையாகவும் உற்சாகமாகவும் உங்களை வைத்திருக்க உதவுகிறது. அவற்றிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. குறிப்பாக சரும சுருக்கங்களை போக்க உதவுகிறது.

சருமம் பொலிவாக்கவும், மெருகூட்டவும் பழங்கள் பயன்படுகிறது. பழங்கள் உண்ணவும் பயன்படுத்துகிறோம். அதே சமயம் வெளிப்பூச்சுக்களுக்கு உதவவும் பயன்படுத்துகிறோம். எந்த வகையான பழம் எந்த விதமாக சரும அழகு மேம்பட பயன்படுகிறது என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 எலுமிச்சை :

எலுமிச்சை :

இது இயற்கை ப்ளீச் செய்கிறது. முகப்பரு, கரும்புள்ளி ஆகியவற்றை மறையச் செய்கிறது. எலுமிச்சையின் ஜூஸ் எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது. பளபளப்பான சருமம் கிடைக்க எந்த மாதிரியாக எலுமிச்சையை பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

1.

தேவையானவை :

எலுமிச்சை சாறு - 1ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து ஒரு பஞ்சினால் முகத்தில் தடவுங்கள். 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் எண்ணெய் சருமப் பிரச்சனை, முகப்பரு பிரச்சனை ஓடியே விடும்.

பப்பாளி :

பப்பாளி :

பப்பாளி மிகச் சிறந்த நன்மை தரக் கூடிய பழம். சுருக்கங்களை போக்குகிறது. கரும்புள்ளி, மருக்களை போக்க உதவுகிறது.பப்பாளியின் சதைப் பகுதியை தினமும் முகத்தில் போட்டு 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் என்றும் இளமைதான்.

அவகாடோ :

அவகாடோ :

அவகாடோவில் அதிக விட்டமின் ஈ, ஏ, சி, கே, பி6 போன்றவை சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்கிறது. ஊதாக் கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்புகளை நீக்குகிறது.

அவகாடோவின் சதைப் பகுதியை எடுத்து அதில் பால் சிறிது கலந்து முகத்தில் தேயுங்கள். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

ஆரஞ்சு :

ஆரஞ்சு :

ஆரஞ்சு அதிக விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. இவை சருமத்தில் உண்டாகும் மெல்லிய சுருக்கம், கருவளையம், மற்றும் கருமையை போக்குகிறது. கொலாஜன் உற்பத்தியை தருவதால் சருமம் என்றும் இளமையாகவேப் இருக்கும்.

ஆரஞ்சு சாறை எடுத்து அதில் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். நல்ல பலனைத் தரும்.

தர்பூசணி :

தர்பூசணி :

தர்பூசணி ஜூஸில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மட்டி ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது சரும தொய்வை குணப்படுத்துகிறது. இதனால் வயதான பின் வரும் தொய்வை தடுக்கலாம்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் சரும நிறத்தை அதிகரிக்கச் செய்கிறது. குளிர்ச்சியை தருவதால் , சருமம் பளபளப்பாகிறது.

வெள்ளரிக்காயை பாலுடன் சேர்த்து அரைத்து முகத்தில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

மாம்பழம் :

மாம்பழம் :

மாம்பழம் தங்க நிறத்தை தரும் பழமாகும். சருமத்திற்கு நல்ல போஷாக்கை அளிப்பதால் ஒடுங்கிய கன்னங்கள் புஷ்டியாகும்.

மாம்பழத்தி சதைப் பகுதியுடன் சிறிது பால் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.

வாழைப் பழம் :

வாழைப் பழம் :

வாழைப்பழம் முகத்தை தொய்வை போக்குகிறது. சுருக்கங்களை குறைக்கும். ஈரப்பதத்தை தருகிறது. வறண்ட சருமத்திற்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. வாழைப்பழத்தை சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். சருமம் புத்துணர்வோடு இருக்கும்.

ஆப்பிள் :

ஆப்பிள் :

ஆப்பிள் அற்புதமான சருமப் பொலிவை தருகிறது. வறண்ட சருமத்திற்கு ஆப்பிளுடன் பால் கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி செய்தால் சருமம் ஈரப்பதம் பெற்று, சுருக்கங்கள் மறைந்து ஜொலிக்கும்.

திராட்சை :

திராட்சை :

திராட்சை சுருக்கங்களைப் போக்கும். நிறத்தை அதிகரிக்கச் செய்யும். திராட்சை சாறு எடுத்து சிறிது தேங்காய் எண்ணெயுடன் கலந்து முகத்தில் தேய்த்து காய்ந்ததும் கழுவுங்கள். அதிக எண்ணெய் சருமம் இருப்பவர்கள் திராட்சையை நேரடியாக தடவலாம்.

முழாம்பழம் :

முழாம்பழம் :

முழாம்பழம் விட்டமின் ஏ, சி கே அதிகம் உள்ளது. நார்சத்தும் அதிகம் உள்ளது. முழாம்பழம் சோரியாஸிஸ் நோய்க்கும் மருந்தாகிறது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முழாம்பழத்தின் சதைப் பகுதியை மசித்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். இவை முகக்கருமையை போக்குகிறது.

அன்னாசிப் பழம் :

அன்னாசிப் பழம் :

அன்னாசிப் பழத்தில் கால்சியம், ஏ, சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றது. இது சரும சுருக்கத்தைப் போக்குகிறது. பொலிவற்ற சருமத்தை பளிச்சென்று மாற்றும். 1 ஸ்பூன் அன்னாசிப் பழச் சாறை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழிந்ததும் கழுவுங்கள்.

முகத்தில் சுருக்கங்கள் மறையும்.

கிவிப் பழம் :

கிவிப் பழம் :

கிவிப் பழம் செல் சிதைவை தடுக்கிறது. டி. என். ஏ பாதிப்பிருந்தால் செல்சிதைவு அதிகமிருக்கும். இதனால் சருமம் விரைவில் முதிர்ச்சி அடைந்துவிடும். இதனை கிவி போக்கிவிடும். கிவிப் பழத்தை மசித்து முகத்தில் போடுவதால் சருமம் அழகாகிறது. சுருமம் மறைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty benefits of Fruits to keep your skin younger

Beauty benefits of Fruits to keep your skin younger
Story first published: Monday, December 18, 2017, 15:00 [IST]