Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
வேக்ஸிங் அல்லது திரெட்டிங் செய்பவரா நீங்கள்? இத படிங்க
இங்கே வேக்ஸிங் மற்றும் திரெட்டிங் செய்வதால் உண்டாகும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
திரெட்டிங் மற்றும் வேக்ஸிங் ஆகியவை சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை எளிதாக போக்க உதவும் ஒரு வழிமுறையாகும். சில பெண்கள் முகத்தில் உள்ள முடிகளை போக்க திரெட்டிங் செய்கின்றனர். சிலர் வேக்ஸிங் செய்கின்றனர்.
திரெட்டிங் மற்றும் வேக்ஸிங் தவிர மற்ற சில வழிகளிலும் முடிகளை அகற்றலாம். இவ்வாறு திரெட்டிங் மற்றும் வேக்ஸிங் செய்வதில் சில நிறைகளும் இருக்கின்றன குறைகளும் இருக்கின்றன. திரெட்டிங் பழங்கால் பழக்கம் ஆகும். வேக்ஸிங் இப்போது பிரபலமடைந்து வரும் ஒரு முறையாகும்.

திரெட்டிங் நிறைகள்
வேக்ஸிங்கை விட திரெட்டிங் சிறந்தது என அழகு கலை வல்லுனர்கள் கூறுகின்றனர். திரெட்டிங் செய்வது வேக்ஸிங் செய்வதால் உண்டாகும் வலியை விட குறைவு. வேக்ஸிங் செய்ய கெமிக்கல் கொண்ட க்ரீம்கள் பயன்படுத்தப்படுவதால், அவை எரிச்சல் மற்றும் சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது. ஆனால் திரெட்டிங்கில் இவ்வாறான பிரச்சனைகள் உண்டாவதில்லை.
திரெட்டிங் முறையில் கெமிக்கல்கள் எதுவும் பயன்படுத்தப்படுவது இல்லை. இதில் மிருதுவான நூல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. செயற்கையான பொருட்கள் எதுவும் இதில் பயன்படுத்தப்படுவது இல்லை.

அதிக வலி
வேக்ஸிங் அளவிற்கு இது வலியை உண்டாக்குவது இல்லை. வேக்ஸிங்கில் க்ரீம் தடவப்பட்டு, உரித்தெடுக்கப்பயன்படும் காகிதம் மூலம் முடியை உரித்தெடுப்பதால், தாங்கமுடியாத அளவு வலி உண்டாகிறது.
திரெட்டிங் முறையில் தனியாக இருக்கும் ஒற்றை முடிகளை எளிதாக நீக்க முடிகிறது. பல முடிகளையும் கூட ஒரே நேரத்தில் நீக்கலாம். வேக்ஸிங்கை விட திரெட்டிங்கின் தீர்வுகள் நன்றாக இருக்கும்.

அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது
சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு திரெட்டிங் சிறந்த தீர்வாக அமையும். மேலும் அனைத்து சரும வகையினருக்கும் இது ஏற்றது.
வேக்ஸிங்கை போலவே திரெட்டிங் 30 நாட்களுக்கு நீடித்திருக்கும். இது ஒவ்வொருவரின் ஹார்மோன்களை பொறுத்து அமையும்.

திரெட்டிங்கின் குறைகள்
நீங்கள் திரெட்டிங் செய்து கொள்ளும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அதற்கான வல்லுனர்களை கொண்டு செய்து கொள்ள வேண்டும் என்பது தான், இல்லையென்றால் உங்களுக்கு சருமத்தில் தடிப்புகள் மற்றும் வீக்கங்கள் தேன்றும் வாய்ப்புகள் அதிகம்.
புருவத்திற்கு கீழே உள்ள சருமம் மிகவும் லேசானது. அதனை சரியான முறையில் கையாளுவது மிகவும் அவசியம். எனவே சரியான ஒரு நபரிடம் வேக்ஸிங் செய்து கொள்வது மிகவும் முக்கியமானது. இல்லை என்றால் சரும கோளாறுகளால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

வேக்ஸிங்கின் குறைகள்
வேக்ஸிங் அதிக அளவு சருமத்தில் முடி வளர்ச்சியால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறந்தது. திரெட்டிங் உடன் ஒப்பிடும் போது, வேக்ஸிங் நீண்ட நாட்கள் நீடித்து இருக்க கூடிய பலன்களை தருகிறது.
வேக்ஸிங் மூலம் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் அனைத்தையும் எளிதில் நீக்க முடிகிறது. ஆனால் மற்ற முறைகளை கையாளும் போது நீண்ட நேரம் செலவிட வேண்டியிருக்கும்.

மென்மையான சருமம்
திரெட்டிங் செய்வதை காட்டிலும், வேக்ஸிங் செய்யும் போது மிகவும் மென்மையான சருமம் கிடைக்கிறது.
வேக்ஸிங் குறைவான செலவில் வீட்டிலேயே செய்யலாம். ஆனால் திரெட்டிங் வல்லுனர்கள் மட்டுமே செய்ய முடியும்.

சேவிங்கை விட சிறந்தது
வேக்ஸிங், சேவிங் செய்வதை காட்டிலும் நல்ல பலன்களை தருகிறது. திரெட்டிங் மற்றும் வேக்ஸிங் 3 வாரங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்றாலும், இது சேவிங் செய்வதை விட சிறந்தது.

வேக்ஸிங் குறைகள்
உங்களது சருமம் மிருதுவானதாகவும், சென்சிடிவாகவும் இருந்தால் இந்த முறை உங்களுக்கு அதிக வலியை தரும்.
சில சமயம் அரிப்பு, சிறிய புண்கள், சிறிய காயங்களை சருமத்தில் ஏற்படுத்திவிடும்.
தவறான முறையில் வேக்ஸிங் செய்தால், அது எரிச்சலையும், தோலில் கருமையையும் உண்டாக்கும்.



Click it and Unblock the Notifications
