இந்த ஒரு பொருள் உங்க முகத்தில் இருக்கும் பிம்பிளை சீக்கிரம் மறையச் செய்யும்!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் முகத்தில் பிம்பிள் அதிகமா இருக்கா? அதைப் போக்க எத்தனையோ வழிகளை முயற்சித்தும் தோல்வியை தான் சந்தித்திருக்கிறீர்களா? அப்படியெனில் பழங்காலம் முதலால பல பிரச்சனைகளுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வேப்பிலையைப் பயன்படுத்திப் பாருங்கள்.

வேப்பிலையில் உள்ள மருத்துவ குணத்தால், ஏராளமான சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். குறிப்பாக பிம்பிளை வேகமாக மறைக்க வேப்பிலை மிகவும் உதவியாக இருக்கும். மேலும் அந்த வேப்பிலையை பலவாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

இங்கு பிம்பிளைப் போக்க வேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேப்பிலை எண்ணெய்

வேப்பிலை எண்ணெய்

உங்களுக்கு பிம்பிள் அடிக்கடி வருமாயின், 1 டீஸ்பூன் வேப்பிலை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், 1 வார காலத்தில் பிம்பிள் முழுமையாக மறைவதைக் காணலாம்.

வேப்பிலை மற்றும் மஞ்சள்

வேப்பிலை மற்றும் மஞ்சள்

வேப்பிலையை அரைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பிம்பிள் வரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் அக்கலவையில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, பிம்பிளை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, பிம்பிள் வருவதைத் தடுக்கும்.

வேப்பிலை பேஸ்ட்

வேப்பிலை பேஸ்ட்

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, வாரம் ஒருமுறை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள கசப்புத்தன்மையினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

வேப்பிலை மற்றும் பட்டை

வேப்பிலை மற்றும் பட்டை

2 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட்டுடன், 1 டீஸ்பூன் பட்டைத் தூளை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ, அவற்றில் உள்ள சிகிச்சைப் பண்புகளால், சருமத்துளைகள் சுத்தப்படுத்தப்பட்டு, இனிமேல் பிம்பிள் வருவது தடுக்கப்படும்.

வேப்பிலை சாறு

வேப்பிலை சாறு

வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அதனைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தைக் கழுவி வர, வேப்பிலையில் உள்ள தன்மைகள், சருமத்தை சுத்தமாகவும், பிம்பிள் இன்றியும் வைத்துக் கொள்ளும். மேலும் இம்முறையால் சருமம் கருமையடைவதும் தடுக்கப்படும்.

வேப்பிலைப் பொடி மற்றும் பால்

வேப்பிலைப் பொடி மற்றும் பால்

வேப்பிலை பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். முக்கியமாக இந்த முறையை மாதவிடாய் சுழற்சி ஆரம்பிப்பதற்கு 2 நாட்களுக்கு முன் செய்தால், மாதவிடாய் காலத்தில் வரும் பிம்பிளைத் தடுக்கலாம்.

வேப்பிலை சோப்பு

வேப்பிலை சோப்பு

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவ சோம்பேறித்தனப்படுபவர்கள், வேப்பிலை சோப்பைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த சோப்பைக் கொண்டு தினமும் 2 முறை முகத்தைக் கழுவ, முகத்தில் உள்ள பிம்பிள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

1 Ingredient That Banishes Pimples Forever

Have you tried this 1 Ingredient That Banishes Pimples Forever? Well, it is a non-expensive ingredient and is available every where. Click more to find out.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter