கருப்பான உதடா? அல்லது குளிரில் கருக்கிறதா? விளக்கெண்ணெய் எப்படி உதவும் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

விளக்கெண்ணெய் நமது பாட்டி காலத்திலிருந்து உபயோகப்படுத்துகிறோம். ஆலிவ் , தேங்காய் எண்ணெய் போல் விளக்கெண்ணெயும் அழகை அதிகரிக்கச் செய்யும்.

How can castor oil help to get rid of dark lips

கூந்தலுக்கு மட்டுமன்றி உங்கள் சருமத்தின் பிரச்சனைகளையும் போக்குகிறது.விளக்கெண்ணெய் கொண்டு எப்படி உங்களை அழகு படுத்தலாம் என்று அழகு ஆலோசகர் சொல்வதை கேளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உதடு கருமையை தவிர்க்க :

உதடு கருமையை தவிர்க்க :

உதடு கருமையை போக்க வேண்டுமென்றால் விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேயுங்கள். வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

 க்ளென்ஸர் :

க்ளென்ஸர் :

உங்களுக்கு தெரியுமா? விளக்கெண்ணெய் அழுக்கை அகற்றும். சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும்.

விளக்கெண்ணெயால் சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

அடர்த்தியான புருவம் கிடைக்க :

அடர்த்தியான புருவம் கிடைக்க :

தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து பாருங்கள். அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்.

சுருக்கங்கள் மறைய :

சுருக்கங்கள் மறைய :

சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்து பாருங்கள். இளமையான சருமம் கிடைக்கும்.

கருவளையம் போக :

கருவளையம் போக :

ஒரு உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வையுங்கள்.

உருளையின் பண்புகள் கலந்த எண்ணெய் உங்கள் கண்களில் மாயாஜாலம் செய்து கருவளையத்தை காணாமல் போக வைக்கும்.

கரும்புள்ளை மறைய :

கரும்புள்ளை மறைய :

விளக்கெண்ணெயுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள்.

15 நிமிடம் கழித்து கழுவவும். வாரம் 3 நாட்கள் செய்து பாருங்கள். சுத்தமான சருமம் உங்களுக்கு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How can castor oil help to get rid of dark lips

Uses of castor oil for toning your skin and to get rid of dark lips
Story first published: Thursday, November 17, 2016, 9:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter