Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
முப்பது வயதுகளில் அழகை பாதுகாப்பது எப்படி ?
முப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும்.
அதனை அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில்லாமல் முப்பது வயதுகளிலும் பெண்கள் இருபது வயது போலத்தான் தோற்றம் கொண்டுள்ளனர். உதற்கு காரணம் சரும பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வே காரணம்.

வயதாகிவிட்டதே என ஒருபோதும் நினைக்கவே கூடாது. வயது என்பது பிறப்பிலிருந்து எண்ணப்படும் ஒரு எண்ணிக்கைதான். அதற்கும் இளமைக்கும் சம்பந்தமில்லை.
நல்ல ஆரோக்கியமான உணவுடன், அழகையும் பராமரித்துவந்தால் இளமையாக இருக்கலாம். ஐம்பது வயதிலும் இளமையாக இருக்கும் நதியா, 40 களில் இளமையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் இவர்களே நல்ல உதாரணம். ஆகவே சருமப்பராமரிப்பை இன்றே தொடங்குங்கள்.
நீர் குடித்தல் :
இளமையாக இருப்பவர்களிடன் போய் சோதித்துப் பாருங்கள். அவர்கள் நிறைய நீர் குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஒருவகையில் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களும், இறந்த செல்களுமே வயதான தோற்றத்தை தரும். அவற்றை தினமும் வெளியேற்றிவிட்டால் சருமம் இளமையாகவே இருக்கும்.
ஆன்டி ஆஜிங் மாஸ்க் :
வீட்டிலேயே இயற்கை முறையில் பப்பாளி, முட்டை, தேன் என பயன்படுத்தினால் சருமத்தில் சுருக்கங்கள் இல்லாமல், இறுக்கமான சருமத்தைப் பெற்று தொய்வடைவதிலிருந்து பாதுகாக்க முடியும். வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்தால் போதும்.
ஃபேஸியல் ஸ்க்ரப் :
சர்க்கரை, கடலை மாவு, பயிற்றம் மாவு போன்ற இயற்கையான ஸ்கர்ப்பினால் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுங்கள். இவை சருமத்தை முதிர்ச்சி அடையாமல் காக்கும்.
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு :
என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்துதான் உறுப்புக்கள் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் இருக்கும். சருமம் என்பது வெறும் அழகு என்றில்லாமல் ஆரோக்கிய சம்பந்தப்பட்ட உறுப்பு.
ஆகவே இரண்டு வகையிலும் பயன் தரும் சருமத்தை ஆரோக்கியமான உணவினாலும் உங்கள் அழகை வெளிக் கொண்டு வர முடியும். ஆகவே நல்ல உணவுகள் உடற்பயிற்சியை தவறாமல் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
சன் ஸ்க்ரீன் லோஷன் :
சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிக்கும் முதுமை அடையச் செய்யும். ஆகவே சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே போக வேண்டாம். இயற்கையான ஹெர்பல் சன் ஸ்க்ரீன் லோஷன் நல்லது.
இரவுகளில் சருமத்திற்கு போஷாக்கு தரும் க்ரீம்களை தடவலாம். க்ரீம்தான் தடவ வேண்டுமென்பது இல்லை. ஆலிவ் எண்ணெய், பால் க்ரீம் , தேங்காய் என்ணெய் ஆகியவற்றை தடவினால் இரவில் வெகு நேரம் எண்ணெய் சருமத்தில் ஊடுருவி, மெருகூட்டும்
ஈரப்பதத்தை சருமத்திற்கு அளியுங்கள் :
முப்பதுகளில் சருமத்தில் வறட்சி தோன்ற ஆரம்பிக்கும். ஆகவே சருமம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். நிறைய நீர் குடித்தும் மாய்ஸ்ரைசரை உபயோகித்தும் சருமத்தில் வறட்சி ஏற்படுத்தாமல் காத்திட வேண்டுவது முக்கியம். வீட்டில் இருக்கும் , பால், தேன், பாதாம் ஆகியவை சருமத்திற்கு போஷாக்கு அளித்து, ஈரப்பதத்தை தக்க வைக்கும்.



Click it and Unblock the Notifications






