Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
சரும வறட்சியைப் போக்க பாலை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்..?
சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால் பிரச்சனையான சருமம் இருந்து, அதில் பிரச்சனைகள் வந்தால் அதனை தாங்கிக் கொள்ளவே முடியாது. அப்படிப்பட்ட பிரச்சனையான சருமம் தான் வறட்சியான சருமம். இத்தகைய சருமம் உள்ளவர்களுக்கு பல்வேறு தீவிரமான பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகம் ஏற்படும். அவற்றைத் தவிர்க்க பலரும் கடைகளில் விற்கப்படும் மாய்ஸ்சுரைசர் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.
இருப்பினும் அந்த மாய்ஸ்சுரைசரும் நீண்ட நேரம் சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதில்லை. அதுமட்டுமின்றி, இந்த மாய்ஸ்சுரைசரும் சருமத்தில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் க்ரீம்களை தொடர்ச்சியாக சருமத்தில் பயன்படுத்தி வந்தால், அவை சருமத்தை மெதுவாக அழிக்க ஆரம்பிக்கும். பின் நாளடைவில் அந்த க்ரீமை தவிர்த்தால், சருமம் கேவலமாக வெளிப்படும்.
ஆகவே சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலைக் கொண்டு பராமரித்து வந்தாலே சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் ஆரோக்கியமாக பொலிவோடு இருக்கும். இங்கு அந்த பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்களேன்...

மென்மையான சருமத்தைப் பெற...
பால் குளியல் மேற்கொள்வதால், சருமம் மென்மையாக இருப்பதோடு, சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு சருமத்திற்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். மேலும் இதில் லாக்டிக் ஆசிட் இருப்பதால், இது செயலிழந்து இருக்கும் புரோட்டீன்களை கரையச் செய்வதோடு, இறந்த செல்களையும் வெளியேற்றும். பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் கடினமான சருமத்தை மென்மையாக்குவதோடு, வறட்சியையும் தடுக்கும். அதற்கு 1 வாளி வெதுவெதுப்பான நீரில் 5 கப் பால் சேர்த்து, 1/2 கப் தேன் மற்றும் விருப்பமான நறுமணமிக்க எண்ணெய்களையும் சேர்த்து குளித்தால், நல்ல மென்மையான சருமத்தைப் பெறலாம்.

பருக்களை போக்க...
பாலில் வைட்டமின்கள் வளமாக உள்ளது. அதிலும் வைட்டமின் ஏ என்னும் சரும வறட்சியைத் தடுக்கும் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே பச்சை பாலை பஞ்சில் நனைத்து, தினமும் 3-4 முறை முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு பளிச்சென்று, பருக்களின்றி இருக்கும்.

பால் ஸ்கரப்
பாலில் சிறிது ஒட்ஸ் பொடியை சேர்த்து, முகத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகி, முகம் பொலிவோடு காணப்படும். அதிலும் இந்த ஸ்கரப்பை முகத்தில் தடவி ஸ்கரப் செய்த பின்னர், 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

மாய்ஸ்சுரைசிங் ஃபேஸ் பேக்
பாலில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை மங்க வைப்பதோடு, சரும வறட்சி, முகப்பரு, சரும எரிச்சல் போன்றவற்றை சரிசெய்யும். அதற்கு பச்ச பாலி முகத்தில் காட்டன் பயன்படுத்தி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.

குதிகால் வெடிப்பில்லாத பாதம்
குதிகால் வெடிப்பு இருந்தால், அதனைப் போக்க க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தினமும் பால் பயன்படுத்தி காலை சுத்தம் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். அதற்கு வெதுவெதுப்பான 4 கப் நீரில், 2 கப் பால் சேர்த்து கலந்து, அதில் கால்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் பயன்படுத்தி, பாதங்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பாதங்களில் வறட்சியினால் ஏற்பட்ட குதிகால் வெடிப்பு நீங்கி, பாதங்கள் மென்மையாகவும் வறட்சியின்றியும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
