Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
கொளுத்தும் வெயிலில் இருந்து ஆண்கள் தங்களது சுருமத்தைப் பாதுகாக்க சில இயற்கை நிவாரணங்கள்!!!
அலுங்காமல், குலுங்காமல் வீட்டில் இருக்கும் பெண்களே வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தவிக்கும் போது, சித்திரை டூ பங்குனி வரை வெயிலில் மட்டுமே அலைந்து திரிந்து வரும் ஆண்களுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும்.
ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்...
டி.வி'யில் ஒளிப்பரப்பபடும் பெரும்பாலான கிரீம்களினால் அந்த தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் தான் பயனடையுமே தவிர, உங்கள் சருமம் அல்ல. இயற்கையான விஷயங்களினால் ஏற்படும் பதிப்புகளுக்கு, இயற்கையிடமே அதற்கான தீர்வும் இருக்கிறது.
இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்!!!
எனவே, கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளில் இருந்து விடுப்பட, இந்த எளிய இயற்கை முறைகளை பின்பற்றுவது தான் சரியான தீர்வளிக்கும்...

எலுமிச்சை சாரு
பெரும்பாலும் வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தால் உங்கள் சருமம் பழுப்படைந்துவிடும். சூரிய ஒளி அதிகம் பட்ட இடத்தில் நன்றாகவே நிறமாற்றம் அடைந்துள்ளதை காண இயலும். இதில் இருந்து தீர்வு காண, எலுமிச்சை சாற்றை உடலில் நன்கு தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து இதமான நீரில் நீராடினால் நல்ல தீர்வுக் கிடைக்கும்.

கற்றாழை
கற்றாழை இயற்கையிலேயே நல்ல குளுமை தரும் குணம் கொண்டது. சருமம் பழுப்படைந்த இடத்தில் கற்றாழையை ஃபேசியல் பேக் போல தடவி, 5-10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் நல்ல பலன் பெறலாம்.

கடலை மாவு
இது பாட்டி காலத்து வைத்தியம் ஆகும், கடலை மாவை, பால், அல்லது தண்ணீரோடு கலந்து சருமம் பழுப்படைந்த இடங்களில் தடவ வேண்டும். பின் அது நன்கு காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது, ஒரு சிறந்த இயற்கை நிவாரணம் ஆகும். திருமண காலங்களில் ஆண்களுக்கு முகம் பொலிவுற இந்த முறையை கையாண்டிருக்கின்றனர்.

சந்தனம்
அதிக குளிர்ச்சி தன்மையுடைய இயற்கை பொருள் தான் சந்தனம். வெளியில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பவுடர்களை வாங்காமல், நீங்களே அரைத்து உபயோகப்படுத்தும் சந்தனத்தைப் பயன்படுத்துங்கள். நன்கு அரைத்த சந்தனத்தை நீரில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் புத்துணர்ச்சி அடையும்.

வெள்ளரி
கோடையை சமாளிப்பதற்காகவே உருவெடுத்தது வெள்ளரிக்காய். இதை அப்படியே சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. வட்ட வட்டமாக நறுக்கிய வெள்ளரிகளை உங்கள் முகத்தில் வைத்து,கால்மணி நேரம் கழித்து முகம் கழுவினால் நல்ல பாண் தரும். இதையே, எலுமிச்சை சாரு, அல்லது பன்னீரில் கலந்துப் பயன்படுதினால், முகம் மிகவும் புத்துணர்ச்சி அடையும்.

முல்தானி மெட்டி
மற்றுமொரு சிறந்த இயற்கை நிவாரணி, முல்தானி மெட்டி. மூலிகைக் கடைகளில் எளிதாக இது கிடைக்கும். இதை குளிர்ந்த நீரில் கலந்து, சருமம் பழுப்படைந்த இடங்களில் தடவிய பின், 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், பழுப்பு நீங்கி முகம் புத்துணர்ச்சி அடையும்.



Click it and Unblock the Notifications
