Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இயற்கையான முறையில் கரும்புள்ளிகளை நீக்க சில அட்டகாசமான வழிகள்!!!
கரும்புள்ளிகள் சருமத்தின் அழகை கெடுப்பதில் முதன்மையானவை. இத்தகைய கரும்புள்ளிகளானது முகப்பரு மற்றும் பிம்பிளால் ஏற்படக்கூடியவை. மேலும் இந்த கரும்புள்ளிகளைச் சுற்றி வெள்ளையான ஒரு வளையம் போன்றவை இருப்பதுடன், அவை சருமத்தின் அழகையே அசிங்கமாக வெளிப்படுத்தும். இவற்றைப் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் கரும்புள்ளிகள் சருமத்தில் இருந்தால், அவை சருமத்தை பொலிவற்றதாகவும், சோர்வுடனும் வெளிப்படுத்தும். மேலும் இத்தகைய கரும்புள்ளிகளை ஏற்படுத்தும் முகப்பரு மற்றும் பிம்பிள் ஏற்படுவதற்கு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஆகவே கரும்புள்ளிகள் வராமல் இருக்க வேண்டுமானால், வாழ்க்கை முறை மற்றும் உண்ணும் உணவுகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
இங்கு சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை முயற்சி செய்தால், கரும்புள்ளிகளை முற்றிலும் நீக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த பொருட்கள் சருமத்தின் பொலிவையும், மென்மையையும் மேம்படுத்தும்.

தேன்
சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்வதில் தேன் முக்கிய பங்கினை வகிக்கிறது. தேனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, பாதிப்படைந்த சரும செல்களைப் புதுப்பிக்கிறது. அதிலும் சருமத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்துவது இறந்த சரும செல்கள். ஆகவே தேனை தொடர்ச்சியாக சருமத்தில் பயன்படுத்தி வரை, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கிவிடுகிறது.

எலுமிச்சை
எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், இதனை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதுடன், சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும். ஒருவேளை எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவும் போது, எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டால், எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். மேலும் எலுமிச்சை சாற்றினை ஃபேஸ் பேக்கிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக எலுமிச்சை சாற்றினை சருமத்திற்கு பயன்படுத்திய பின்னர், வெயிலில் சுற்றக்கூடாது. இதனால் சருமம் மேலும் கருமையாகத் தான் மாறும்.

பால் மற்றும் பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்களில் லாக்டிக் ஆசிட் உள்ளது. இவை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைப்பதில் சிறந்தது. மேலும் பால் பொருட்களில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அதனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அது சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் சருமத்திற்கு பால், மில்க் க்ரீம் அல்லது தயிரை சருமத்திற்கு நேரடியாக தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வர, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

வைட்டமின் ஈ
சருமத்திற்கு வைட்டமின் ஈ மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலில் உள்ள தேவையற்ற டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். எனவே இரவில் படுக்கும் போது வைட்டமின் ஈ நிறைந்த பொருளை சருமத்தில் தடவி வந்தால், அது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கிவிடும். வேண்டுமானால் இதற்கு வைட்டமின் ஈ மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

மஞ்சள்
தினமும் தவறாமல் மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதுடன், சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, முகப்பரு மற்றும் பிம்பிள் வராமல் தடுக்கும். எனவே சருமத்தில் எந்த பிரச்சனை வந்தாலும், மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்தி வாருங்கள்.



Click it and Unblock the Notifications
