Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சரும கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
பெரும்பாலான அழகுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் எலுமிச்சையை சிலர் சருமத்திற்கு பயன்படுத்த பயப்படுவார்கள். ஏனெனில் எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் வறட்சி அதிகரித்து, புள்ளி புள்ளியாக வந்துவிடும் என்பதால் தான். ஆனால் நிறைய அழகு நிபுணர்கள், சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதில் எலுமிச்சையை விட சிறந்த பொருள் வேறு எதுவும் இல்லை என்று சொல்வார்கள்.
ஏனென்றால் எலமிச்சை உள்ள இயற்கையான ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை முற்றிலும் போக்கிவிடும். இருப்பினும் இதன் சாற்றினை நேரடியாக சருமத்திற்கு பயன்படுத்தினால், பின் அதிகப்படியான சரும வறட்சியை சந்திக்க நேரிடும்.
எனவே எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம் என்று ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வழிகளை வறட்சியான சருமம் உள்ளவர்களும், சென்சிடிவ் சருமம் உள்ளவர்களும் கூட அச்சமின்றி பயன்படுத்தலாம். சரி, இப்போது சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

எலுமிச்சை துண்டு
சருமத்தின் நிறத்தை அதிகரிக்க எலுமிச்சை துண்டை, நேரடியாக சருமத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, உடனே மாய்ஸ்சுரைசரைத் தடவி விட வேண்டும். இதனால் சருமம் அதிக வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

எலுமிச்சை ஸ்ப்ரே
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் எலுமிச்சையை நேரடியாகப் பயன்படுத்தினால் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட ஆம்பிக்கும். ஆகவே அத்தகையவர்கள், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எலுமிச்சை சாறு மற்றும் அதற்கு சமமான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, பின் முகத்தை நீரில் கழுவி, பின்பு எலுமிச்சை ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இப்படி பயன்படுத்த பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவ மறக்க வேண்டாம்.

எலுமிச்சை ஸ்கரப்
சரும அழகை அதிகரிக்க எலுமிச்சையை பலவாறு பயன்படுத்தலாம். இங்கு அதில் ஒரு வழியைக் கொடுத்துள்ளோம். அது என்னவெனில், 2 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 1 முட்டையின் வெள்ளைக்கரு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை லோசன்
2 பங்கு எலுமிச்சை சாற்றில், 3 பங்கு கிளிசரின் சேர்த்து, அத்துடன் 1 பங்கு ரம் சேர்த்து நன்கு கலந்து, தினமும் சருமத்தில் தடவி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க்
ஒரு பௌலில் சரிசமமான அளவில் எலுமிச்சை சாறு, தக்காளி சாறு, வெள்ளரிக்காய் சாறு எடுத்துக் கொண்டு, அத்துடன் சந்தனப் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும். அதிலும் இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.



Click it and Unblock the Notifications
