Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
காபியை அளவாக குடிப்பதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்!!!
இவ்வுலகில் காபி பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். ஏனெனில் அதன் சுவையும், மணமும் ஆளையே மயக்கும் அளவில் இருக்கும். ஆனால் அந்த காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன. இருப்பினும் இதனை அளவாக குடித்து வந்தால், இதனால் கிடைக்கும் நன்மைகளே தனி தான்.
அதிலும் காபி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. இங்கு காபியை குடிப்பதால், எப்படி சருமத்தின் அழகு கூடுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, இனிமேல் தினமும் ஒரு கப் காபியை குடித்து, அழகாக மாறுங்கள்.
உடல் அழகை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு!!!

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது
தற்போது வெளியே சென்றாலே மாசுக்களால் சருமத்தின் அழகானது பாதிக்கப்படுகிறது. ஆனால் உடலில் போதிய அளவில் ஆன்டி-ஆன்டிஸிடன்ட்டுகள் இருந்தால், இந்த மாசுக்களால் சருமத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கலாம். இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது காபியில் எண்ணற்ற அளவில் இருப்பதால், இதனை தினமும் ஒரு கப் பருகுவது நல்லது.

கடுமையான சூரியக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும்
ஓசோனில் ஓட்டை ஏற்பட்டு விட்டதால், சூரியக்கதிர்கள் நேரடியாக நம் சருமத்தின் மீது பட்டு, சருமத்தில் நோய்களை ஏற்படுத்துவதுடன், சருமத்தின் அழகையும் பாதிக்கிறது. எனவே சருமத்தை பாதுகாக்கும் வண்ணம், காபியில் காப்ஃபைன் உள்ளதால், இதனை தினமும் பருகுங்கள். மேலும் ஆய்வு ஒன்று, காப்ஃபைனானது டிஎன்ஏ பாதிப்படைவதை தடுத்து, சூரியக்கதிர்களால் சருமத்தில் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கிறது என்று சொல்கிறது.

பொலிவான மென்மையான சருமம்
காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, கொலாஜன் அளவை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதால், சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
காபி குடித்தால், இரத்த ஓட்டத்தின் அளவானது அதிகரித்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.



Click it and Unblock the Notifications
