Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
வெள்ளையாக வேண்டுமா? அப்ப அதுக்கு பாதாம் தான் பெஸ்ட்...
அனைவருக்குமே நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, சருமத்தில் மட்டும் எண்ணற்ற பிரச்சனைகள் தவறாமல் ஏற்படுகிறது. எனவே எப்போதும் அழகை அதிகரிக்க செயற்கை வழிகளை முயற்சிப்பதை விட, இயற்கை வழிகளை முயற்சித்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதுடன், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் பாதாம். பாதாம் விலை அதிகமாக இருந்தாலும், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதையே சருமத்தில் பயன்படுத்தினால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும். இங்கு அந்த பாதாமை எப்படியெல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பாதாம் மற்றும் பால் பேக்
2 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடியை, பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

பாதாம், முட்டை மற்றும் எலுமிச்சை
1 டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் விரைவில் அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெய் மசாஜ்
பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

பாதாம் மற்றும் தேன்
பாதாமை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, காலையில் எழுந்து அதன் தோலை நீக்கிவிட்டு அரைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

பாதாம்-ஓட்ஸ் ஃபேஸ் பேக்
1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடி சேர்த்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் சேய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இந்த முறையை வறட்சியான சருமம் உள்ளவர்கள் பயன்படுத்துவது சிறந்தது.



Click it and Unblock the Notifications
