Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!!
நிறைய மக்கள் முகப்பருக்களால் அதிகம் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். முகப்பருக்களானது முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இப்படி முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, சருமத்தை சரியாக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சொன்னா நம்பமாட்டீங்க.... ஏன்னா இந்த உணவுகள் முகப்பருக்களை உண்டாக்கும்!!!
முகப்பருக்கள் வந்தால் அதனை சரிசெய்ய உடனே கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்தாமல், முதலில் எதற்கு முகப்பருக்கள் வருகிறது என்று யோசித்து, அதனை சரிசெய்தால் முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, அதற்கான காரணம் தெரிந்த பின்னர், வந்த முகப்பருவை போக்க இயற்கை வழியில் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். அதிலும் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு போக்க முயற்சிக்க வேண்டும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை, முகப்பருக்களை போக்க எந்த பொருட்களையெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்!!!

எலுமிச்சை சாறு
இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து, இரவில் படுக்கும் போது பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

கடுகு பொடி
கடுகை பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அதில் உள்ள சாலிசிலிக் ஆசிட் பருக்களை போக்கிவிடும்.

க்ரீன் டீ
க்ரீன் டீ செய்து, அதனை ஐஸ் க்யூப்பில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, பின் அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், அவை விரைவில் பருக்களை மறையச் செய்யும்.

தக்காளி
தக்காளி சாற்றினை தினமும் இரண்டு முறை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் இது நல்ல பலன் அளிக்கும்.

லாவெண்டர் ஆயில்
லாவெண்டர் ஆயிலை பிம்பிள் மீது தடவி வந்தால், அவை பிம்பிளை விரைவில் நீக்கிவிடும். ஆனால் இந்த ஆயில் அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த எண்ணெய் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால், இதனை பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவினால், அவை முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றுவதோடு, பருக்கள் இருந்தாலும், அதனை விரைவில் குணமாக்கும்.

பூண்டு
பூண்டினை சாறு எடுத்து, அதனை பிம்பிள் மீது வைத்து, எவ்வளவு நேரம் ஊற வைக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். உண்மையிலேயே பூண்டு பருக்களை விரைவில் போக்கிவிடும்.

க்ளே மாஸ்க்
க்ளே என்னும் களிமண்ணை நீரில் கலந்து, அத்துடன் சிறிது லாவெண்டர் அல்லது டீ ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி, காலையில் எழுந்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால், பருக்கள் மறைந்துவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தில் தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் போய்விடும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications