Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
டீன் ஏஜ் பெண்களே! உங்கள் சருமம் பளபளக்க வேண்டுமா?
பதிமூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான டீன் ஏஜ் பருவம் மிகவும் அழகாகவும், வண்ணமையமாகவும், பிரகாசமாகவும் இருக்கும் பருவமாகும். ஒரு பெண்ணின் வாழ்வில் வரும் டீன் ஏஜ் அவளுக்கு பல புது அனுபவங்களை கொடுக்கின்றது. அவர்களது உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களால் இது சாத்தியமாகிறது. டீன் ஏஜ் பருவத்தில் தான் உடல் மற்றும் மனதில் அதிக மாற்றங்களை நாம் பார்க்கின்றோம். இந்த வயதில் ஏற்படும் சுரப்பிகளின் மாற்றங்களால் பெண்களின் தோலில் பல்வேறு மாற்றங்களை காண முடிகிறது. சருமம் சம்மந்தமான எந்த வித பிரச்சனைகளையும் பெண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. வயதிற்கு வரும் போதும் சருமத்தில் இத்தகைய மாற்றங்களை காண முடியும். பருக்கள், கரும் புள்ளிகள் ஆகியவை வரவும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் இந்த பருவத்தில் சரும பராமரிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது.
குளிர் காலத்தில் நமது தோலின் தன்மை மேலும் கடினமாகி விடும். இந்த காலத்தில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் வெளிப்படையாக தெரியும். ஆகையால் குளிர் காலத்தில் சருமத்தை மிக முக்கியமாக பராமரிப்பது அவசியமாகும். அழகான, பருக்கள் இல்லாத, மென்மையாக சருமத்தை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். குளிர் காலத்திற்கென்று இருக்கும் தனிப்பட்ட சரும பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்துங்கள். இவை உங்கள் தோலில் அற்புதம் செய்யும். டீன் ஏஜ் பெண்கள் தங்களுடைய சருமத்தை பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள் இதோ:

தோலை தூய்மைப்படுத்துதல
இந்த செயல் தான் மிகவும் முக்கியானதாகும். சரும பராமரிப்பில் இது முதல் படியாகும். டீன் ஏஜ் பெண்களின் சுரப்பிகளின் மாற்றங்கள் காரணமாக சருமத்தில் துளைகளும் அடைப்புகளும் ஏற்படக்கூடும். ஆகையால் இதை பயன்படுத்தினால் துளைகளில் உள்ள அழுக்குகளை எடுத்து விடலாம்.

அழகு சாதனங்கள்
நல்ல நிறுவனங்களில் தயார் செய்யப்பட்ட தரம் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துங்கள். குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் இவற்றை பயன்படுத்துவது நமது சருமத்திற்கு ஈரப்பதமூட்டி வெடிப்புக்கள் வரமல் தடுக்கும்.

ஒப்பனை செய்யும் பொருட்களை தவிர்க்கவும்
அதிக அளவு ஒப்பனை செய்யாமல் இருப்பது நல்லது. அவை சருமத்திற்கு கேடு விளைவிப்பவையாகும். சருமத்தில் கரும் புள்ளிகள், பருக்கள் ஆகியவற்றை அவை வரவழைத்து விடும். கடுமையான ரசாயன பொருட்களை இவை கொண்டிருப்பதால் டீன் ஏஜ் பெண்களுக்கு பெருத்த பாதிப்பை இந்த ஒப்பனை பொருட்கள் தரும்.

இறந்த திசுக்களை நீக்குதல்
நல்ல ஒரு ஸ்கரப் அல்லது கடலை மாவு பயன்படுத்தி சருமத்தின் மேல் பகுதியில் உள்ள இறந்த திசுக்களையும் உரிந்த தோல்களையும் நீக்கி விட முடியும். இவை உங்கள் சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்திருக்க உதவும். அதிக அளவில் பருக்கள் இருக்கும் பெண்கள் இதை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள்
குளிர்காலத்தில் ஏற்படும் வறணன்ட சருமப் பிரச்சனைகளையும், அது தொடர்பான பிற பிரச்சனைகளையும் உடனடியாக நீக்க முயற்சி எடுங்கள். குளித்த உடன் நல்ல மாய்ஸ்சுரைசரை உடலில் தடவிக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமம் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும். குளிர் காலத்தில் டீன் ஏஜ் பெண்கள் சரும பாதுகாப்பிற்கு மாய்ஸ்சுரைசர்கள் மிகவும் உகந்ததாகும்

குளிர் கால ஆடைகள்
குளிர்கால ஆடைகளை பயன்படுத்துங்கள். இது காலத்திற்கேற்ப அணிவது மட்டுமல்லாமல் உங்களது சருமத்தையும் பாதுகாப்பாக வைக்கும். உங்கள் உடம்பை முழுவதும் மூடும் ஆடைகளை விரும்புங்கள். மிகுந்த குளிரில் நாம் வெளிப்படும் போது சருமம் பாதிக்கப்படும்.

வறண்ட உதடுகளை கவனிக்கவும்
பனி அல்லது குளிர் காலத்தில் உதடுகள் வறண்டு போவது இயற்கை. இந்த காலத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது உகந்ததாகும். நல்ல தரமுள்ள லிப் பாமை எப்போதும் கையோடு வைத்துக்கொள்வது நல்லது. அவ்வப்போது இவற்றை அணிந்து கொள்ள முடியும்.

தண்ணீர் அளவு
எப்போதும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இவை உங்கள் சருமத்தை இயற்கையாகவே ஈரப்பதமூட்டும். அது மட்டுமல்லாமல் தோலின் நீட்சித் தன்மையையும் இது அதிகரிக்கும். டீன் ஏஜ் பெண்களுக்கு தண்ணீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.



Click it and Unblock the Notifications
