Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
நல்ல இளமையான மற்றும் ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? அப்ப விஸ்கி ஃபேஸ் பேக் போடுங்க!!!
ஆல்கஹாலை குடித்தால் தான் உடலுக்கு பிரச்சனைகள் வருமே தவிர, அதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமம் நன்கு ஜொலிக்கும். மேலும் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் நிறைய ஆல்கஹால்கள் பயன்படுகின்றன. அதில் பெரும்பாலும் நாம் கேள்விப்பட்டிருப்பது பீர் அல்லது ஒயின் தான். ஆனால் இப்போது அவற்றைப் பற்றி பார்க்கப் போவதில்லை. ஆல்கஹாலில் ஒன்றான விஸ்கியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
தற்போது விஸ்கி ஃபேஷியல் பெண்களிடையே பிரபலமான ஒன்றாக உள்ளது. இத்தகைய விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதற்கு, அழகு நிலையங்களில் நிறைய செலவாகும். ஆனால் அந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே முயற்சி செய்யலாம்.
ஆமாம், இந்த விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? விஸ்கி ஒரு ஆன்டி-செப்டிக் பொருள் என்பதால், இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள பாக்டீரியா நீங்கி, முகப்பரு வருவதைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, சரும சுருக்கம், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகளை போக்கலாம்.
சரி, இப்போது அந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை எப்படியெல்லாம் போடலாம் என்று பார்ப்போம்.

விஸ்கி மற்றும் தண்ணீர்
1 டீஸ்பூன் விஸ்கியை, 3 மிலி தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் முகத்தை மசாஜ் செய்து, பின் சுத்தமான நீரில் கழுவினால், சருமத்தில் பொலிவு அதிகரிப்பதோடு, சருமம் இறுக்கமடையும்.

விஸ்யுடன் எலுமிச்சை சாறு
எலுமிச்சை ஒரு ப்ளீச்சிங் பொருள் என்பதால், இதனை விஸ்கியுடன் சேர்த்து மாஸ்க் போட்டால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தவிர்க்கலாம். அதற்கு விஸ்கியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

தேனுடன் விஸ்கி
தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சுரைசர். எனவே 2 டீஸ்பூன் விஸ்கியை தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முதுமைத் தள்ளிப் போவதோடு, சரும வறட்சியும் நீங்கும்.

விஸ்கி மற்றும் பால் பவுடர்
விஸ்கி ஃபேஸ் பேக்கை பால் பவுடர் கொண்டும் செய்யலாம். அதற்கு ஒரு பௌலில் பால் பவுடரைப் போட்டு, அதில் விஸ்கி மற்றும் தேன் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து, ஈரமான முகத்தில் தடவி, 2-3 நிமிடம் மசாஜ் செய்து, பின் நன்கு உலர விட்டு, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

விஸ்கி மற்றும் முட்டை
சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை போக்க முட்டை ஒரு சிறந்த பொருள். எனவே இத்தகைய முட்டை நன்கு அடித்து, அதில் சிறிது விஸ்கி, எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சரும சுருக்கங்கள் மறையும்.



Click it and Unblock the Notifications
