Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
முகத்தில் உள்ள கருமையைப் போக்க குங்குமப்பூவை யூஸ் பண்ணுங்க...
குங்குமப்பூவை பாலில் போட்டு கர்ப்பிணிகள் குடித்தால், வயிற்றில் வளரும் சிசு நல்ல நிறத்தில் பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, அனைவருமே பின்பற்றலாம். ஆனால் அத்தகைய குங்குமப்பூவை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் இந்த குங்குமப்பூவைக் கொண்டு பல ஃபேஸ் பேக்குகள் போடலாம். அதிலும் வாரம் முழுவதும் நன்கு அலைந்து முகத்தில் உள்ள பொலிவு நீங்கி, கருமையானது சூழ்ந்து இருக்கும். இத்தகைய கருமையைப் போக்கி, முகத்தைப் பொலிவோடும், கருமையை நீக்கி நல்ல நிறத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக குங்குமப்பூ மிகவும் விலைமதிப்பானது. ஆனால் அதன் நன்மை உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. இருப்பினும், அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே, அதன் பலன் கிட்டும். எனவே சீக்கிரம் வெள்ளையாக ஆசைப்படுபவர்கள், குங்குமப்பூவைக் கொண்டு ஃபேஸ் பேக்குகள் மற்றும் பல செயல்களை மேற்கொண்டு வந்தால், எளிதில் நல்ல நிறத்தைப் பெறலாம்.
சரி, இப்போது அந்த குங்குமப்பூவை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பொலிவோடும், அழகாகவும் இருக்கும் என்று பார்ப்போம்.

குங்குமப்பூ மற்றும் பால்
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவடையும்.

குங்குமப்பூ மற்றும் க்ரீம் ஃபேஸ் பேக்
ப்ரஷ் க்ரீம் உடன் சேர்த்தும் ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு க்ரஷ் க்ரீமுடன் குங்குமப்பூவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து, பின் அதன் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், சருமம் மென்மையாகவும், வெள்ளையாகவும் மாறும்.

குங்குமப்பூ மற்றும் மஞ்சள்
மஞ்சள் ஒரு சிறந்த அழகுப் பொருள். இது முகத்தை அழகாக வைக்க உதவுவதோடு, சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். எனவே அத்தகைய மஞ்சளுடன் குங்குமப்பூவை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாகும்.

உணவில் குங்குமப்பூ...
குங்குமப்பூவை உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உணவு சுவையுடன், இருப்பதோடு சருமத்திற்கு நல்ல பலனும் கிடைக்கும்.

குளிக்கும் நீரில்...
குங்குமப்பூவில் உள்ள நன்மை கிடைக்க வேண்டுமெனில், அதற்கு ஈரப்பசையானது தேவை. எனவே தினமும் குளிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் சிறிது குங்குமப்பூவை தூவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளித்தால், முகம் மட்டுமின்றி, உடல் முழுவதுமே நல்ல நிறத்தைப் பெறலாம்.

குங்குமப்பூ ஸ்கரப்
குங்குமப்பூவை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் குங்குமப்பூவை ஊற வைத்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவினாலும், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

சந்தனப் பொடி மற்றும் குங்குமப்பூ
குங்குமப்பூவானது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் முகத்தில் பருக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதனை குளிர்ச்சி மிகுந்த சந்தனப் பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாகவும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.

குங்குமப்பூ, பால் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போட்டு, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமமானது வெள்ளையாகும்.

குங்குமப்பூ மற்றும் எலுமிச்சை சாறு
எண்ணெய் பசை சருமம் உள்ளவரா? அப்படியெனில், குங்குமப்பூவை எலுமிச்சை சாற்றில் கலந்து மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் அதிகரித்து காணப்படும்.



Click it and Unblock the Notifications