Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
சரும வறட்சியை தடுக்க உதவும் வைட்டமின் ஈ உணவுப் பொருட்கள்!!!
குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் சரும வறட்சி. இத்தகைய சரும வறட்சியைத் தடுக்க வேண்டுமானால், வைட்டமின் ஈ உள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும். மேலும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை சரியாக பராமரிக்காவிட்டால், வறட்சி அடைந்த பகுதியின் நிறமான நாளடைவில் மாறிவிடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே சருமத்தைப் பராமரிக்க பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளது.
மேலும் இந்த வைட்டமின் ஈ சத்தானது நிறைய உணவுப் பொருட்களில் இருப்பதால், அந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், நிச்சயம் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க பயன்படும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த பொருட்களை உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளது.
அவற்றைக் கொண்டு சருமத்தை பராமரித்து, குளிர்காலத்தில் வறட்சியில்லாத அழகான சருமத்தைப் பெறுங்கள். சரி, இப்போது வைட்டமின் ஈ நிறைந்துள்ள பொருட்களைப் பார்ப்போமா!!!

ஆலிவ் ஆயில்
வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆலிவ் ஆயில். ஆகவே இந்த எண்ணெயைக் கொண்டு, சருமத்தை சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு தினமும் தவறாமல் செய்து வந்தால், சரும வறட்சியானது நீங்கும்.

பூசணிக்காய்
பூசணிக்காயிலும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. எனவே பூசணிக்காயை அரைத்து, சருமத்தில் தடவி, நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

அவகேடோ
அவகேடோ கூட சரும வறட்சியைத் தடுக்க உதவும். அதற்கு அவகேடோவை நன்கு அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி லேசாக மசாஜ் செய்து நன்கு காய வைத்து, பின் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

பசலைக்கீரை
பசலைக்கீரையில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அத்தகைய பசலைக்கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வர, சரும வறட்சியுடன், சரும சுருக்கங்களும் நீங்கும். குறிப்பாக இதனை முகத்தில் தடவி நன்கு உலந்த பின்னர், லேசாக ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பாதாம்
பாதாமிலும் வைட்டமின் ஈ வளமாக உள்ளது. ஆகவே பாதாம் எண்ணெய் பயன்படுத்தி சருமத்தை தினமும் மசாஜ் செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

பெர்ரி பழங்கள்
பெர்ரிப் பழங்களும் சருமத்திற்கு நிறைய பலன்களைக் கொடுக்கும். மேலும் இதில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால், இவற்றை அரைத்து, தினமும் காலையில் முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் தவறாமல் ஒரு வாரத்திற்கு செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்ரிக்காட்
தினமும் இரவில் படுக்கும் முன், ஆப்ரிக்காட் பழத்தைக் கொண்டு முகத்தை தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

தக்காளி
தக்காளியைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சரும வறட்சியுடன், சரும நிறமாற்றமும் தடுக்கப்படும். ஆகவே நேரம் கிடைக்கும் போது சருமத்திற்கு தக்காளியை அரைத்தோ அல்லது அதன் ஒரு துண்டைக் கொண்டோ மசாஜ் செய்ய வேண்டும்.

வெண்ணெய்
வெண்ணெயிலும் வைட்டமின் ஈ நல்ல அளவில் உள்ளது. எனவே வெண்ணெயை முகம் மற்றும் வறட்சி அடையும் இடங்களில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

கோதுமை
கோதுமையில் கூட வைட்டமின் ஈ சத்து உள்ளது. அதற்கு கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் வறட்சி நிச்சயம் நீங்கும்.

பப்பாளி
பப்பாளியைப் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஆனால் பப்பாளியில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அதனால் தான் பப்பாளி சாப்பிட்டாலோ அல்லது அதனைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போட்டாலோ, சருமம் அழகாக ஜொலிக்கிறது. எனவே தினமும் பப்பாளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட வடிவில் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

வேர்க்கடலை
வேர்க்கடலையை வறுத்து பொடி செய்து, அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவி, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், அதில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும்.

ஜாதிக்காய்
ஜாதிக்காய் பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும். இதனால் ஜாதிக்காய் சரும வறட்சியைத் தடுக்கும்.



Click it and Unblock the Notifications
