Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சரும பராமரிப்பில் கோகோ வெண்ணெயின் நன்மைகள்!!!
இன்றைய நவீன உலகத்தில் நாம் அனைவரும் நம்மை அழகாகக் காட்டிக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். இதனால் பலர் அழகு நிலையங்களுக்கு சென்று அதிக கட்டணம் செலுத்தி தன்னை மேலும் அழகாக்கிக் கொள்ளுகின்றனர். இவ்வாறு அதிகம் செலவழிக்காமல் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை கொண்டு நம்மை நாமே அழகுப்படுத்திகொள்ளலாம். இதன் மூலம் இயற்கையான பொருட்களை உபயோகிப்பதால் பின்விளைவுகள் எதுவும் இருக்காது.
ஒவ்வொரு பெண்ணும் அழகாக பிறந்து, அழகாக வாழ்ந்து இந்த உலகை அழகாகின்றாள். வேலை செய்ய உணவு தேவை என்பதுபோல் அழகான சருமத்திற்கு சருமப் பராமரிப்பு மிகவும் அவசியம். உங்கள் சருமம் ஸ்வாசிப்பதினால் போதுமான பராமரிப்பு அவசியமானதாகும். நல்ல சரும பராமரிப்பினால் உங்கள் சருமம் அழகானதாகவும் பளபளப்பானதாகவும் ஆகும். அழகான சருமம் மற்றும் ஒளிமயமான முகத்தையும் விரும்பாதவர் எவரேனும் உள்ளனரா? அந்த காலங்கள் முதல் கோகோ வெண்ணெய் சரும பராமரிப்பு பொருட்களில் மிகவும் இன்றியமையாதது ஆகும். சிறந்த மாய்ஸ்சரைஸரும் ஆகும். உங்கள் சரும பராமரிப்பு கிரீம் மற்றும் லோஷன் ஆகியவற்றின் முதன்மைப் பொருள் இந்த கோகோ வெண்ணெய் ஆகும். கடைக்கு சென்று உங்கள் கிரீம்களில் உள்ள உள்ளடங்கிய பொருட்களில் பார்த்தால் நிச்சியம் நம்புவீர்கள்.
மாய்ஸ்சரைசிங் தன்மையை முதன்மையாக கொண்டுள்ளதால் இந்த கோகோ வெண்ணெய் சிறந்த சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப் படுகின்றது. அதில் உள்ள மற்ற தன்மைகள் நமது சருமத்திற்கு வளமான தோற்றத்தை அளிக்கின்றது. இந்த கோகோ வெண்ணெய் சருமத்தை தனியாக அடையாளம் கண்டுகொள்ளலாம். கோகோ வெண்ணெய் என்ற பேரை கொண்டு ஒரு வகையான சாக்லேட் என எண்ணக் கூடாது. இருப்பினும், இது கோகோ மரங்களில் கோகோ பாட் இருக்கும் காபி கொட்டைதான். கோகோ கொட்டையில் இருந்து எடுக்கும் விஜிடபிள் கொழுப்பு தான் இந்த கோகோ வெண்ணெய். சரும பராமரிப்பில் தனித்தன்மை கொண்ட இந்த கோகோ வெண்ணெய் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இரட்டிப்பு விருந்து
கோகோ மரத்தில் இருந்து எடுக்கும் கோகோ வெண்ணெயில் பொடாஷியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீஸ், இரும்பு, காப்பர் மற்றும் பல மினரல்கள் நிறைந்துள்ளது. இதனை தவிர்த்து கோகோ வெண்ணெய் ஒரு சிறந்த நீயுரோட்ரான்ஸ்மிட்டர் (செரோடொனின் மற்றும் டிரிப்டோப்ஹான்). இதனால் கோகோ வெண்ணெய் இரட்டிப்பு விருந்துதானே - இதனை உபயோகப்படுத்த இன்னும் என்ன யோசனை?
போற்றத்தக்க தன்மை
இந்த கோகோ வெண்ணெய்யில் உள்ள மாய்ஸ்சுரைசிங் தன்மை ஒரு போற்றத்தக்க தன்மையாகும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உங்கள் சருமத்தை நல்ல முறையில் மாய்ஸ்சுரைசிங் செய்யும் தன்மை வாய்ந்தவை. மேலும் சொரியாசிஸ் மற்றும் எக்சிமா போன்ற சரும தொல்லைகளை சரிசெய்யும். இவை அனைத்தையும் தவிர்த்து, அது ஒரு மென்மையான நறுமணத்தை தருவதால் அரோமா தெராபியில் ஒரு போற்றத்தக்க பொருளாக விளங்குகின்றது.
சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட்
சருமத்தில் உள்ள ப்ரீ ரேடிக்கல்களை நீக்குவதால் இந்த கோகோ வெண்ணெய் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்டாக விளங்குகின்றது. ப்ரீ ரேடிக்கல்கள் உங்கள் சரும அழகை சிதைத்து மூப்படையச் செய்யும். இந்த வெண்ணெய் உங்கள் இளமையை தக் கவைக்க உறுதி அளிக்கும். ஏன் இதை முயற்சிக்கக்கூடாது?
சிறந்த வழியில் சரும சீரமைப்பு
இந்த வெண்ணெய் உங்கள் சருமத்தை நம்பத்தகுந்த முறையில் சீரமைகின்றது. கோகோ வெண்ணெய்யில் உள்ள கோகோ மாஸ் பாலிஃபீனால் சருமத்தின் ராஷஸ் அழித்து விடும். மிகவும் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் இந்த வெண்ணெய் புற்றுநோய் அணுக்கள் வளர்ச்சியை தடுக்கும் தன்மை வாய்ந்தவை. வைட்டமின் இ மற்றும் எ நிறைந்துள்ளதால் இது உங்கள் சருமத்தை சீரமைத்து நீண்ட நாள் வரை உறுதியாக வைத்திருக்கும். உங்கள் சருமதிக்கு இது அவசியம் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?
வடுக்கள், பருக்கள் மற்றும் ஸ்ட்ரெச் மார்க் போன்றவைகளுக்கான சிகிச்சை
பருக்கள் நிறைந்த முகத்திற்கு இந்த வெண்ணெயை தவிர சிறந்த சிகிச்சை வேறு எதுவும் இருக்க முடியாது. இதில் உள்ள ஆண்டிபாக்டீரியல் தன்மை சருமத்தில் ஏற்படும் வடுக்கள், பருக்கள் மற்றும் ஸ்ட்ரெச் மார்க்சை குறைக்கும். பிரசவிக்கும் பெண்கள் இந்த வெண்ணெயை உபயோகித்து ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருந்து விடுபடலாம். இந்த கோகோ வெண்ணெய் உபயோகித்த சருமம் பருக்கள், வடுக்கள் மற்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருந்து விலகியே இருக்கும். சிறந்த பலனைப் பெற சுத்திகரிக்கப்படாத வெண்ணெயை உபயோகிக்கலாம். எனினும் இவ்வாறு கிடைப்பது கடினம் தான். கிரீம்களில் இருக்கும் வெண்ணெய் சுத்திகரிக்கப்பட்டவைகளாகத் தான் இருக்கும். மேலும் அதனோடு வேறு சில பொருட்களும் சேர்ப்பதால் சிறந்த பலனை அளிக்காது. கோகோ வெண்ணெய் சருமத்தை பற்றி என்ன நினைகின்றீர்கள்? பாராட்டக்கூடிய ஒன்றுதானே?



Click it and Unblock the Notifications