Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
ஆண்களே! எப்போதும் இளமையுடன் காணப்பட வேண்டுமா? இத படிங்க...
அழகு என்று வரும் போது பெண்களுக்கு மட்டும் தான் அதிக நாட்டம் இருக்கும் என்று நினைக்கக்கூடாது. ஆண்களுக்கும் அவர்களது அழகில் அக்கறை உள்ளது. அதற்காக அவர்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒருசில செயல்களை தவறாமல் தினமும் பின்பற்றி வந்தாலே, இளமையைத் தக்க வைக்க முடியும்.
பொதுவாக முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்துபவையான சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை பெண்களுக்கு நன்கு வெளிப்படையாக தெரியும். ஆனால், ஆண்களுக்கு தெரிய சில நாட்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல் பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவார்கள். மேலும் வயதிற்கு ஏற்ற தோற்றமே இருக்காது. ஏனெனில் பழக்கவழக்கங்கள் மற்றும் டயட் போன்றவை தான் ஆண்களை விரைவில் முதுமைத் தோற்றத்தை அடைய வைக்கிறது. ஆகவே பழக்கவழக்கங்கள் மற்றும் டயட்டில் மிகவும் கவனமாக இருந்தால், நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கலாம்.
இப்போது இளமையைத் தக்க வைப்பதற்கு, ஆண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

புகைப்பிடித்தல்
இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது புகைப்பிடித்தலை நிறுத்துவது தான். ஏனெனில் புகைப்பிடித்தால், சருமத்தில் சுருக்கங்கள் விரைவில் வருவதோடு, சரும வறட்சியை உண்டாக்கும். மேலும் புகைப்பிடித்தலை நிறுத்துவதால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆண்மைத் தன்மை குறைபாடு ஏற்படுவதிலிருந்து விடுபடலாம்.

ஷேவிங்
ஆண்கள் தொடர்ச்சியாக ஷேவிங் செய்வதால், சருமமானது மிகவும் கடினமாவதோடு, வறட்சி மற்றும் ஒருவித சுருக்கமானது ஏற்படும். ஆகவே எப்போதும் ஷேவிங் செய்யும் போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதோடு, ஷேவிங் செய்த பின்னர் ஷேவிங் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.

திராட்சை ஜூஸ்
ஆண்களின் இளமையானது நீடிக்க வேண்டுமெனில், தினமும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த திராட்சை பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சருமத்தில் நெகிழ்வுத்தன்னை நீள்வதோடு, இளமை தோற்றத்தை தக்க வைக்கலாம்.

ஆல்கஹால்
முதுமைத் தோற்றத்தை தடுப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹால் இரத்த நாளங்களை அளவுக்கு அதிகமாக விரிவடையச் செய்து, சரும சுருக்கத்தை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சி
முதுமைத் தோற்றமானது முகத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை, தசைகளின் மூலம் வெளிப்படும். எனவே தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தசைகளானது இறுக்கமடைந்து, இளமையான தோற்றத்தைத் தரும்.

கிளின்சர்
வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், பாலை கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்வது நல்லது.

மசாஜ்
முதுமையை தடுக்க வேண்டுமெனில், உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். இத்தகைய இரத்த ஓட்டத்தை மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படுத்தலாம். இதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டமானது சீராக சென்று, இளமையைத் தக்க வைக்கும்.

காய்கறிகள்
உணவில் காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். அதிலும் பசலைக் கீரை அல்லது பீன்ஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, சருமமும் பொலிவோடு இளமையுடன் காணப்படும்.

சன் ஸ்கிரீன்
முதுமையை தக்க வைக்க வேண்டுமெனில், அதிகமாக வெயிலில் சுற்றக்கூடாது. ஒருவேளை வெயிலில் செல்வதாக இருந்தால், சன் ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்தி செல்ல வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்கள் சருமத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சுருக்கங்களை எளிதில் உண்டாக்கிவிடும்.

தண்ணீர்
தினமும் குறைந்தது 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இளமையுடன் காணப்படும்.



Click it and Unblock the Notifications
