Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க சில வழிகள்!!!
கர்ப்பத்தின் போது பெரிதான வயிறு, பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையும். நார்மல் டெலிவரி ஆனாலும் சரி, சிசேரியன் ஆனாலும் சரி, வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் பெண்களின் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பெற்ற பின், பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை தான் தழும்புகள் என்றாலும், இது மிகுந்த மன சங்கடத்தை அளிக்கும். இத்தழும்புகளை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், இயற்கை முறையில் இவற்றை குறைக்க முடியும்.
அதிலும் இத்தகைய மகப்பேறு தழும்புகளை இயற்கையாக குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அப்படி அதிசயக்க வைக்கும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வைத்தியம் இயற்கையாகவே மகப்பேறு தழும்புகளை குறைத்து, தோலில் நிறமாற்றம் பெற உதவ முடியும். எனவே மகப்பேறு தழும்புகளை போக்க விரும்புபவர், கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகளை முயற்சித்து பார்க்கலாம்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் இயற்கையாகவே வெளுக்கும் தன்மை உள்ளது. ஆகவே தழும்புகள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறு கொண்டு மசாஜ் செய்தால் தழும்புகள் மறையும்.

ஐஸ் கட்டிகள்
தழும்புகளில் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்வது, சரும துளைகளை இறுக்கி தோல் நிறமிகளை குறைக்கும். ஆகவே தழும்புகள் குறையும்.

தக்காளி சாறு
தக்காளி சாற்றில் உள்ள ஆன்டி ஆக்சிஜனேற்ற பண்புகள் சரும நிறத்தை குறைத்து, சேதம் உண்டாவதை தடுக்கிறது.

ஆப்ரிகாட்
ஆப்ரிகாட்டை ஊற வைத்து அரைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் வாரம் மூன்று முறை தடவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, சருமத்தை சரிப்படுத்தி சருமத்தில் உள்ள நிறமிகளை குறைக்கிறது.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யவும். இது தழும்புகளை போக்குவது மட்டுமல்லாமல், சருமத்தை ஈரப்பதமாக்கி மிருதுவாக்கும்.

ஓட்ஸ்
ஓட்ஸை பாலில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில தேய்க்க வேண்டும். இது தழும்புகளை குறைக்க ஒரு சிறந்த வழி. ஏனெனில் ஓட்ஸ் கொண்டு தேய்ப்பது இறந்த செல்களை நீக்கிவிடும்.

கன்சீலர்
மகப்பேறு தழும்புகளை உடனடியாக மறைக்க வேண்டும் என்றால் கன்சீலர் உபயோகிக்க வேண்டும். ஏனென்றால் கன்சீலர் சரும நிறத்தை விட ஒருபடி குறைவாக இருக்கும். ஆகவே தழும்புகள் உடனடியாக மறைக்கப்படும்.



Click it and Unblock the Notifications
