Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சரும வறட்சியைத் தடுக்கும் இயற்கை லோசன்கள்!!!
வருடம் முழுவதும் அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான சரும பிரச்சனை என்றால், அது சரும வறட்சி. இத்தகைய சரும வறட்சி உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை மாறுபாடுகளினால் ஏற்படக்கூடியவை. இவ்வாறு சரும வறட்சி ஏற்பட்டால், முறையான பராமரிப்பு மிகவும் இன்றியமையாதது. இல்லாவிட்டால், அது இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, சரும வெடிப்புக்கள், சருமம் மென்மையிழத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
இத்தகைய சரும வறட்சியைத் தடுக்க எந்த பொருட்களைப் பயன்படுத்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில இயற்கை லோசன்களைக் கொடுத்துள்ளது. பொதுவாக இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களில் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கும். அப்படி, இங்கு குறிப்பிட்டுள்ள இயற்கை லோசன்களை தயாரிப்பதில் பால் மையப் பொருளாக உள்ளது. ஏனெனில் பாலில் எண்ணெய்ப்பசை அதிகம் இருப்பதால், இதனைப் பயன்படுத்தினால், நிச்சயம் சரும வறட்சியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பாக இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை தினமும் மேற்கொண்டு வந்தால், சரும வறட்சியில் இருந்து விரைவிலேயே விடுபடலாம்.

தயிர்
ஒரு பெளலில் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தயிரை ஊற்றி நன்கு நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இந்த கலவையை தினமும் வறட்சி ஏற்படும் இடங்களில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

சீஸ்
சீஸ் ஒரு மென்மையான பொருள். இத்தகைய பொருளை சருமத்தில் பயன்படுத்தினால், சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் பொலிவாகவும் மாறும். அதற்கு ஒரு பௌலில் 1/2 கப் துருவிய சீஸ் மற்றும் பால் சேர்த்து, ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் செய்து, அதனை சருமத்தில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், வறட்சியானது நீங்கிவிடும்.

அவகேடோ
அவகேடோவும் சரும வறட்சியைப் போக்குவதில் ஒரு சிறப்பான பொருள். அத்தகைய அவகேடோவை அரைத்து, அதனை பாலுடன் சேர்த்து சற்று கெட்டியாக கலந்து, சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

பாதாம்
நல்ல மென்மையான மற்றும் வறட்சியில்லாத சருமம் வேண்டுமெனில், 1 கப் பாதாம் பொடியில், 1/2 கப் பால் சேர்த்து கெட்டியாக கலந்து, சருமத்தில் தடவி, ஊற வைத்து கழுவ வேண்டும்.

தக்காளி
5 தக்காளியை சற்று கெட்டியாக அரைத்து, அதில் 1/2 கப் பால் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். கலவையானது கெட்டியானதும், அதனை சருமத்தில் தடவி நன்கு காய வைத்து, இறுதியில் பாலால் கழுவி, பின் தண்ணீரில் அலச வேண்டும்.

முட்டை
முட்டையில் உள்ள ஒரு கெட்ட விஷயம் என்னவென்றால், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவது தான். எனவே ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றி, அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் 1/2 கப் பால் ஊற்றி நன்கு அடித்து, ஈரமான சருமத்தில் தடவி உலர வைத்து, கழுவ வேண்டும்.

ஓட்ஸ்
வறட்சியான சருமத்தில் இருந்து விடுபட, ஓட்ஸ் மற்றும் பாலை கலந்து, அதனை சருமத்தில் தடவி, 1/2 மணிநேரம் கழித்து நீரில் அலச வேண்டும்.

மாவு
1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவில், 1/2 கப் பால் ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து மென்மையாக கலந்து, அதனை வாரத்திற்கு 2 முறை தடவி ஊற வைத்து கழுவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

எண்ணெய்
3/4 கப் பால், ப்ரஷ் க்ரீம் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும், இதனால் நிச்சயம் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

லெட்யூஸ்
சரும வறட்சியை உடனே போக்க வேண்டுமெனில், இந்த மாதிரி ட்ரை செய்யுங்கள். அதற்கு லெட்யூஸ் கீரை பொடியை பால் சேர்த்து ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரில் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
