Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொருட்கள்!!!
அழகுப் பொருட்கள் எப்போதுமே வித்தியாசமானதாக இருக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் சமையலறையில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே சருமத்தை அழகாக்கலாம். சொல்லப்போனால், அன்றைய காலத்தில் உள்ள பெண்களின் அழகிற்கு சமையலறைப் பொருட்கள் தான் காரணம். நமது பாட்டி, அம்மா இன்னும் இளமையாக காட்சியளிப்பதற்கு, அந்த சமையலறை அழகுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தியிருப்பதே ஆகும். பொதுவாக நாம் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் பால் பொருட்கள் அனைத்தும் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாது, சருமத்திற்குப் பொலிவைத் தரும் அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது.
இத்தகையப் பொருட்களைப் பயன்படுத்தினால், இவை சருமத்திற்கு பக்கவிளைவை ஏற்படுத்துமோ என்று அஞ்சத் தேவையில்லை. எனவே சருமத்தை அழகாக்க கெமிக்கல் கலந்தப் பொருட்களைப் பயன்படுத்தாமல், வீட்டுச் சமையலறையில் இருக்கும் பொருட்களையே பயன்படுத்தி, அழகான பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.
இப்போது சமையலறையில் உள்ள அத்தகையப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டிலேயே சருமத்தை அழகாகப் பராமரியுங்கள்.

மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி-செப்டிக் பொருள் அதிமாக உள்ளது. இதனைக் கிருமிநாசினிப் பொருள் என்றும் சொல்லாம். எனவே இத்தகையப் பொருளை பயன்படுத்தினால், சருமத்தில் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் கருமையான திட்டுக்களைப் போக்கலாம்.

தக்காளி
தக்காளியில் சிட்ரஸ் உள்ளதால், இதனை பழுப்பு நிற சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தினால், நீக்கிவிடலாம். அதற்கு தக்காளியின் ஒரு துண்டை சருமத்தில் தேய்த்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.

பால்
பால் நிறைய அழகு சிகிச்சையில் பயன்படுகிறது. ஏனெனில் பாலை சருமத்திற்குப் பயன்படுத்தினால், சரும வறட்சியை தடுப்பதோடு, சருமத்தை மென்மையாகவும், பட்டுப் போன்றும் மின்னச் செய்யும்.

உப்பு
உப்பை ஸ்கரப் போன்றும் பயன்படுத்தலாம். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்கிவிடுவதோடு, சருமத்தில் உள்ள சத்துக்களை தக்க வைக்கலாம்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் சமையலிலும், அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அதிலும் இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், முதுமைத் தோற்றத்தை தடுக்கும்.

வெங்காயம்
வெங்காயத்தில் ஜிங்க் அதிகம் உள்ளதால், சருமத்திற்கு மிகவும் ஏற்றது. ஜிங்க் ஒரு ஆன்டி-பாக்டீரியல் பொருள் என்பதால், அது சருமத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க வல்லது.

சர்க்கரை
சர்க்கரையும் உப்பைப் போன்றே ஸ்கரப் செய்ய வல்லது. இது ஒரு சிறந்த ஸ்கரப் ரெசிபியில் ஒன்று. வேண்டுமெனில் இதனை வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியலுக்கும் சிறந்தது. இவ்வாறு செய்வதால், சருமத்தில் வளரும் முடியைத் தடுக்கலாம்.

க்ரீம்
ஃப்ரஷ் க்ரீம்மை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்தால், சருமம் மென்மையாகும். அதிலும் இதனை செய்வதால், சருமம் நன்கு புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும்.

எலுமிச்சை
சிட்ரஸ் பழங்களுள் எலுமிச்சை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதிலும் இதனை ப்ளீச்சிங் மற்றும் ஃபேஸ் பேக் போட்டால், சரும நோய்கள் மற்றும் பழுப்பு நிற சருமத்தை தடுக்கலாம்.

ஓட்ஸ்
ஓட்ஸ் சொரசொரப்புடன் இருப்பதால், இது ஸ்கரப் செய்வதற்கு ஏற்ற ஒரு அழகுப் பொருள். இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, சருமத் துளைகள் நன்கு சுவாசிக்கவும் செய்யும். மேலும் இது பருக்களை குறைக்கவும் உதவும்.

தயிர்
தயிர் பால் பொருட்களில் ஒன்றாக இருப்பதால், இதுவும் சருமத்தை மென்மையாக்க உதவும். அதிலும் இது புளிப்புடன் இருப்பதால், இதில் வைட்டமின் சி அதிகம் இருக்கும். ஆகவே இது சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, பழுப்பு நிற சருமத்தை தடுக்கும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் குளிர்ச்சித்தன்மை அதிகம் உள்ளது. எனவே முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும் போது, கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்தால், கண்கள் குளிர்ச்சியடைவதோடு, புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் கண்களைச் சுற்றி, கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.



Click it and Unblock the Notifications