Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
சருமத்தை அழகாக்க வினிகரைப் பயன்படுத்துங்களேன்...
சருமத்தை அழகாக பராமரிப்பதற்கு நிறைய பொருட்கள் உள்ளன. அவற்றில் வினிகரும். வினிகர் சமைப்பதற்கு மட்டுமின்றி, அழகைப் பராமரிக்க உதவும் பொருட்களுள் ஒன்றாகவும் உள்ளது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும்.
எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். இத்தகைய வினிகர் மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது. எனவே இரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களை பின்பற்றுவதே மிகவும் சிறந்தது.
இப்போது வினிகரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

உடல் துர்நாற்றம்
ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும்.

மென்மையான சருமம்
ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும்.

எண்ணெய் பசை சருமத்தினருக்கு சிறந்தது
எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும்.

வேனிற்கட்டி
அதிகப்படியான வெயிலால் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கிறது.

சரும எரிச்சல் மற்றும் அரிப்பு
வெயிலால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல், கொசுக்கடி, பூச்சிக்கடியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெட்டுக் காயம் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.

அழகான பாதத்திற்கு
பாதத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை போக்குவதற்கு வினிகரை நீரில் கலந்து, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும்.

குதிகால் வெடிப்பு
குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்த்து, பின் வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும்.

மென்மையான கைகள்
கைகள் அழுக்கோடு, மென்மையிழந்து இருக்கிறதா? அப்படியெனில் கைகளில் உள்ள கிருமிகளை போக்குவதற்கு, வினிகர் கலந்த நீரில், கைகளை கழுவ வேண்டும். இதனால் கிருமிகள் நீங்குவது மட்டுமின்றி, கைகளும் மென்மையாகும்.

கரும்புள்ளிகள்
3 ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து, 2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் தூங்கும் முன் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து, காலையில் கழுவினால், கரும்புள்ளிகள் அறவே போய்விடும்.

முதுமை தோற்றம்
முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தும் புள்ளிகளை போக்குவதற்கு, வெங்காயச் சாற்றில் சிறிது வினிகர் சேர்த்து கலந்து தடவி, ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்தால், அவற்றை முற்றிலும் போக்கிவிடுவதோடு, வராமல் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications