Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
நல்ல அழகான சருமம் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
நமது சருமமானது தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்புடையதாகவே அமைந்துள்ளது. ஆனால், இந்த தட்பவெப்ப நிலைகள் அதிகரிக்கும் போது அவை நமது சருமத்தை பெரிதும் பாதிக்கின்றது. இதனால் சரும வறட்சி, பருக்கள், தேமல் மற்றும் சில சரும நோய்கள் போன்றவை வர வாய்ப்பளிக்கின்றது. நாம் என்னதான் இயற்கை முறையில் சரிசெய்தாலும், கடைகளில் கிடைக்கும் சில க்ரீம்களையும் லோஷன்களையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றில் நமது சருமத்திற்கு ஏற்ப க்ரீம்களையும், லோஷன்களையும் பயன்படுத்தி வந்தால், மென்மையான பளிச்சிடும் சருமத்தைப் பெறலாம்.
தற்போது முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில், வருடம் முழுவதும் ஒரே நிலையில் இருக்கும் சருமத்தை பெறும் வாய்ப்புகள் தான் அதிகம். ஆகவே நமது முகத்தை பேணிப் பாதுகாப்பது முதன்மையாக இருக்கின்றது. எனினும், உடல் முழுதும் இருக்கும் சருமத்தை மென்மையாகவும், வழுவழுப்பாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். மேலும் இயற்கையாகவே நிறம் மாறினாலும், நமது சருமத்தை உறுதியாகவும், நிறமாகவும், வறட்சியின்றி இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு இதோ சருமத்தை அழகாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்ள 10 எளிதான வழிகளைப படிக்கலாம்.

தினமும் பிரஷ் செய்யவும்
தினமும் பிரஷைக் கொண்டு உடல் முழுவதும் வட்ட இயக்கமாக தேய்க்க வேண்டும். இதன் மூலம், இரத்த ஓட்டம் ஊக்குவிப்பது, செல்லுலைட் குறைய செய்வது மட்டுமல்லாது, இறந்த செல்களை உதிரச் செய்து, அதன் கீழ் இருக்கும் மென்மையான சருமத்தை வெளிக்காட்டும்.

ஸ்கரப் செய்யவும்
உடலை பிரஷ் கொண்டு தேய்த்தப் பின்பு, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரப் உபயோகித்து குளிக்கவும். அதிலும் தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து தடவி வந்தால், சருமம் ஸ்பா சிகிச்சைக்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும். இதனால், சருமம் அழகாகவும், நல்ல நறுமணத்தையும் பெறக்கூடும்.

பாடி வாஷ் கொண்டு மாய்ஸ்சுரைஸ் செய்யவும்
இந்நாளில் பாடி வாஷ்கள் நல்ல பயனை அளிக்கின்றது. பலவற்றில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் சரும உறுதிக்கு தேவையான பொருட்களும் உள்ளது. ஆகவே உங்களுக்கு தேவையான ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். அதிலும் அவை சருமத்தில் அதிகப்படியான நீர் சேர்க்கும் படியானதாக அல்லது சருமத்தில் தங்கும் மாசுக்களை நீக்குமாறும் இருக்கலாம். மேலும் சரும உரிப்பிற்கு தேவையான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் கிளைக்கோலிக் அமிலங்களும் இவற்றில் உள்ளது.

மாய்ஸ்சுரைஸ் செய்யும் முன் எண்ணெய் உபயோகிக்கவும்
ஆம், சிறிது எண்ணெயை தடவுதலால் மெல்லிய படலம் உருவாகி, அது பிறகு தடவும் மாய்ஸ்சுரைசரை உட்கொள்ள உதவும். இந்த செயல்முறையை வேகப்படுத்த, விருப்பமான எண்ணெயை (மோனோ எண்ணெய் அல்லது பயோ எண்ணெய்) ஸ்ப்ரே பாட்டில் வைத்து, குளித்த பின்பு ஸ்ப்ரே செய்து வரலாம்.

ஜூஸ் அதிகம் குடிக்கவும்
மூன்று நாட்கள் டிடாக்ஸ் பயன்படுத்தி வந்தால், அது வயிற்று உப்புசத்தை குறைத்து, சருமத்தை பொலிவை அதிகரிக்கும். அதற்கு ஜூஸ்களை அதிகம் பருகி, காபி, மது, சர்க்கரை, உப்பு போன்றவற்றை தவிர்த்தால், மூன்றே நாட்களில் உப்புசம் குறையும். இதனால் வயிறு சீரடைந்து தட்டையாகி விட்டதை உணர முடியும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்குளை கண்காணிப்பது
ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை முற்றிலும் நீக்குவது என்பது முடியாது என்றாலும், அதனை தடுக்க தினமும் மாய்ஸ்ச்சுரைஸ் செய்வது மற்றும் நிறைய தண்ணீர் அருந்துவதாலும் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி ஸ்ட்ரெச் மார்க்குகளை மங்கச் செய்வதற்கு, ரெட்டினால் உள்ள பொருட்களைப் பயன்படுத்தலாம். இது அணுக்களின் உற்பத்தியையும், கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும். மாறாக, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளில் சன் ஸ்க்ரீன் லோஷன் தடவினால், அது மேலும் சருமத்தை கருமையாக்கி வெளிப்படுத்தும்.

செல்லுலைட்டை எதிர்ப்பது
தினமும் சீரம் பயன்படுத்துவதால், அது செல்லுலைட் உருவாகுவதை எதிர்த்து செயல்படும். மேலும் நல்ல முடிவுகளைப் பெற இதனை பிரச்சனை உள்ள இடங்களான தொடை, வயிறு மற்றும் உடலின் பின்புறம் வட்டவடிவமாக தடவ வேண்டும்.

மல்டி-டாஸ்க்கிங் மாய்ஸ்ச்சுரைஸ் பயன்படுத்தவும்
சரும உறுதிக்கு தேவையான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உள்ள மாய்ஸ்ச்சுரைஸ்களைப பயன்படுத்த வேண்டும். ஜெர்கேன் நேச்சுரல் க்ளோவில் உள்ள டானெர், சரும நிற மாறுதலை தடுத்து, நல்ல தங்கமான சருமத்தை பெற உதவும்.

சன் ஸ்க்ரீன் தினமும் தடவவும்
இது மிகவும் முக்கியமான ஒன்று. பெரும்பாலான பெண்கள் சன் ஸ்க்ரீன் லோஷனை உடலில் தடவாமல் முகத்திற்கு மட்டுமே தடவுகின்றார்கள். ஆனால் SPF 15 உள்ள மாய்ஸ்ச்சுரைசரை தினமும் உடம்பில் தடவ வேண்டும். தேவைப்படும் போது மீண்டும் தடவலாம்.

கடைசி டச்
ப்ரான்சிங் மற்றும் ரோஸ் பவுடர் உடல் முழுவதும் தடவ முயற்சிக்க வேண்டும். இப்படி நிறத்தைக் கொடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதால், அது சருமம் நிறம் மாற வழிவகுக்கும். மேலும் இது சருமத்தை ஒளியூட்டுவதால், பளிச்சிடும் தூய்மையான சருமத்தை உருவாக்கும்.



Click it and Unblock the Notifications











