Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
திருமணத்தன்று கருவளையம் இல்லாமலிருக்க சில டிப்ஸ்...
திருமணம் என்று சொன்னதுமே முகத்தில் ஒருவித கல்யாணக் களை வந்துவிடும். அந்த நேரம் அனைவருமே நன்கு அழகாக இருக்க வேண்டுமென்று சருமத்தில் அதிக கவனம் சொலுத்தி, அதனை சரியாக பராமரிப்போம். அதற்காக நிறைய ஃபேஸ் பேக் போடுவது, அதிகமான அளவு பழங்களை சாப்பிடுவது, உடலை குறைக்கவும், சருமம் பொலிவாகவும் க்ரீன் டீ குடிப்பது என்றெல்லாம் செய்வோம். இருப்பினும் திருமணத்தன்று மட்டும் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும்.
மேலும் இந்த கருவளையத்தை என்ன செய்தாலும் போகாமல் இருக்கும். எனவே திருமணத்தன்று இந்த மாதிரியான கருவளையம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொண்டு, அவற்றை பின்பற்றுவதோடு, அளவுக்கு அதிகமான தண்ணீரைக் குடித்தாலும், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, கண்களும் நன்கு பொலிவோடு காணப்படும்.

தூக்கம்
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தாலே, தம்பதிகளுக்கு இருக்கும் குஷியில், இரவு முழுவதும் சாட்டிங் செய்வதால், தூக்கமே வராது தான். இருப்பினும் அவ்வாறு சரியாக தூங்காமல் இருந்தால், அது உடலையும், உடல் அழகையும் பாதிக்கும். அதற்காக இரவில் தூங்காமல் இருந்து, பகலில் தூங்கிக் கொண்டால் எதுவும் ஏற்படாது என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் இரவில் சரியான நேரத்தில் தூங்கினால் தான், கண்களில் கருவளையம் ஏற்படாமல் இருக்கும்.

வெள்ளரிக்காய்
நிறைய பெண்கள் கருவளையம் வராமலிருக்க கண்களுக்கு வெள்ளரிக்காயை வைப்பார்கள். ஏனெனில் வெள்ளரிக்காயை வைத்தால், கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், பளிச்சென்று ப்ளீச்சிங் செய்தது போன்றும் இருக்கும். ஆகவே திருமண நாளன்று ஒரு 20 நிமிடம் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு வைத்தால், கருவளையம் போய்விடும். வேண்டுமெனில் வெள்ளரிக்காய்க்கு பதிலாக உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்.

டீ பேக்
திருமணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்னர், கண்களில் உள்ள கருவளையத்தை போக்க வேண்டுமா? அப்படியெனில் டீ பேக்கை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின் அதனை பிளிந்து, அந்த டீ பேக்கை கண்களின் மீது 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை செய்து வந்தால், கண்களில் உள்ள கருவளையம் எளிதில் நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சையின் சாற்றை வைத்து, கண்களைச் சுற்றி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது தக்காளி சாற்றையும் கலந்து செய்யலாம். அதிலும் இதனை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், கருவளையம் போய்விடும். கண்களும் நன்கு சற்று கொலுகொலுவென காணப்படும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகள்
உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும், கருவளையம் வரும். ஆகவே அதற்கு பசலைக் கீரை, முட்டைகோஸ், கேரட், தக்காளி போன்றவற்றை சற்று அதிகம் சாப்பிட வேண்டும்.
வேறு என்னவெல்லாம் செய்தால் கருவளையம் நீங்கும் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...



Click it and Unblock the Notifications