Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும்
பட்டுப்போன்ற சருமத்தை பெற "ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்" செய்யுங்க...
சருமம் பட்டுப் போன்று இருப்பதற்கு சருமத்திற்கு கிளின்சிங் மற்றும் மாஸ்சுரைசிங் போன்றவற்றை மட்டும் செய்தால் போதாது. இவற்றால் மட்டும் சருமம் நன்கு அழகோடு, பட்டுப் போட்டு இருக்கும் என்று நினைப்பது தவறு. ஏனெனில் இதனால் மட்டும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் முழுவதும் நீங்கிவிடாது. அவ்வப்போது சருமத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். மேலும் இந்த ஸ்கரப்பிற்கு நிறைய பொருட்கள் மார்கெட்டில் விற்கப்படுகின்றன. இருப்பினும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வதே சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கும்.
மேலும் அனைவருக்கும் ஓட்ஸின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பொருட்களில் ஒன்றாக இருப்பதோடு, சருமத்திற்கு அழகூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. இப்போது அந்த ஓட்ஸை வைத்து எவ்வாறு சருமத்திற்கு ஸ்கரப் செய்வதென்று பார்ப்போமா!!!

* ஓட்ஸ் மற்றும் தேன்- சிறிது ஓட்ஸ் எடுத்துக் கொண்டு அதனை பொடி செய்து, ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 2-3 நிமிடம் மென்மையாக மசாஜ் போல் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
* ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை- எலுமிச்சை சருமத்திற்கு பொலிவேற்றும் பொருட்களில் ஒன்று. அதிலும் அந்த எலுமிச்சை சாற்றை ஓட்ஸ் உடன் சேர்த்து ஸ்கரப் செய்தால், முகம் நன்கு பளிச்சென்று காணப்படும். அதற்கு ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, ஸ்கரப் செய்து கழுவிட வேண்டும்.
* ஓட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில்- ஓட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயிலை சேர்த்து செய்வது என்பது ஒரு சிறந்த முறை. ஏனெனில் ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஏஜிங் பொருள் அதிகமாக இருப்பதோடு, இயற்றையான சன் ஸ்கிரீன் கூட. ஆகவே இவற்றை வைத்து ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து, இளமையான தோற்றத்தை பெறலாம்.
* ஒட்ஸ் மற்றும் தக்காளி- ஓட்ஸ் உடன் தக்காளி சாற்றை விட்டு ஸ்கரப் செய்தால், தக்காளியில் உள்ள அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும். அதிலும் இந்த ஸ்கரைப்பை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், நல்ல பலனை விரைவில் பெற முடியும். மேலும் ஓட்ஸை வைத்து ஸ்கரப் செய்வதால், சருமத்துளைகள் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்லாமல், சருமத்தின் நிறமும் கூடும்.
* ஓட்ஸ் மற்றும் வெள்ளரிக்காய்- வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியைத் தருவது. அத்தகைய வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, ஓட்ஸ் உடன் கலந்து வாரத்திற்கு ஒரு முறை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* ஓட்ஸ் மற்றும் பால்- இந்த கலவையை பார்த்ததும் சாப்பிடுவதற்கு என்று தான் நினைப்போம். ஆம்! சாப்பிடும் முறை தான். ஆனால் இந்த முறையை வைத்து சருமத்திற்கு ஸ்கரப் செய்தால், இதில் உள்ள பால் சருமத்திற்கு ஈரப்பசையை தருவதோடு, முகத்தின் அழகும் கூடும். மேலும் பாலோடு சேர்ந்த ஓட்ஸ் தோளின் அமைப்பில் ஏற்படும் வெடிப்பு போன்வை ஏற்படாமல் சரிசெய்யும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் ஓட்ஸை வைத்து ஸ்கரப் செய்து வந்தால், சருமம் அழகோடும், பொலிவோடும் இருப்பதோடு, சருமத்தை பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications