Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சரும பிரச்சனைகள் எதுவும் வராமலிருக்க என்ன பண்ணலாம்?

முகப்பரு
பொதுவாக முகப்பருவானது டீனேஜ் பருவத்தில் தான் வரத் தொடங்கும். ஏனெனில் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் ஏற்படுகிறது. ஆகவே இந்த முகப்பரு வராமலிருக்க க்ரீம்களை பயன்படுத்துவதை விட, ஒரு சில நல்ல உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதற்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், பிஸ்கட், ஸ்வீட், கேக், குளிர் பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிலும் கொக்கோ நிறைந்த உணவுகளான டீ, காபி போன்றவற்றை அளவாக குடிக்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை, பால், புரோட்டீன் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 4-5 முறை முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிக்க வேண்டும். முகப்பரு காரணமாக கூட ஸ்கால்ப்பில் பொடுகு வரக்கூடும். ஆகவே எப்போது கூந்தலை கூத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நிறமூட்டல்
சருமத்தில் ஆங்காங்கு புள்ளிகள் போன்று காணப்படுகிறதா? அப்படியெனில் உடலில் புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே இநத் குறைபாட்டினால், சருமத்தில் உள்ள நிறமிகள் ஆங்காங்கு தங்கி, புள்ளிகள் போன்று காணப்படுகின்றன. அதிலும் இந்த பிரச்சனை கர்பபமாக இருக்கும் போது ஏற்பட்டால், அது பிரசவத்திற்கு பின் உண்ணும் வைட்டமின் உணவால் சரியாகிவிடும். மேலும் அவை மசாஜ் செய்தால், முற்றிலும் போய்விடும்.
கரும்புள்ளிகள் - வெள்ளை புள்ளிகள்
சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் தான் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. முக்கியமாக மூக்கு, உதட்டிற்கு கீழ் மற்றும் தாடை போன்ற இடங்களில் தான் வரும். இந்த பிரச்சனை நீங்குவதற்கு குறைந்த ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிடுவது, வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிப்பது போன்றவற்றால் சரியாகிவிடும். மேலும் இந்த பிரச்சனையை அழகு நிலையங்களுக்குச் சென்றால், அதற்காக உள்ள சிறப்பு சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.
இந்த வகையான பிரச்சனைகள் அனைத்தும் எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு தான் பெரிதும் ஏற்படும். ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications