Latest Updates
-
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
சருமம் வறண்டு, சொரசொரப்புடன் இருக்கிறதா? கிளிசரின் யூஸ் பண்ணுங்க!!!

முக வறட்சியை தடுக்கும் கிளிசரின் ஃபேஸ் மாஸ்க்ஸ்...
கிளிசரின் மற்றும் தேன் : ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரினை கலந்து, முகத்திற்கும், கழுத்திற்கும் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் ஈரப்பசை இருப்தோடு, முகமும் அழகாய் மின்னும்.
கிளிசரின் மற்றும் வாழைப்பழம் : பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் கிளிசரின் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் மசித்த வாழைப்பழத்தை போட்டு, கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் வாழைப்பழத்தில் உள்ள கனிமப் பொருட்கள் சருமத்திற்கு கிடைப்பதால், சருமம் மாசற்று அழகாக பொலிவோடு இருக்கும்.
கிளிசரின் மற்றும் ஓட்ஸ் : 3-4 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை நன்கு அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கிளிசரின் விட்டு, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் போல் தேய்க்கவும். பின் அதனை 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த முறையால் கிளிசரின் முகத்திற்கு ஈரப்பசையை அளிப்பதோடு, ஓட்ஸ் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.
கிளிசரின், முட்டை மற்றும் எலுமிச்சை : ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் 3-4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, 10-25 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தின் நிறம் சற்று கூடுவதோடு, ஈரப்பசையும் கிடைக்கும்.
களிமண் மற்றும் கிளிசரின் : எப்படி கிளிசரின் சருமத்திற்கு சிறந்ததோ, அதேப் போல் களிமண்ணும் சிறந்தது. இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு 1 டேபிள் ஸ்பூன் களிமண் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கிளிசரினை கலந்து, முகத்திற்கு தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க்கால் சருமம் ஈரப்பசையுடன், மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.
ஆகவே இவ்வாறெல்லாம் செய்து முகத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் தான் செய்ய வேண்டும். அதற்கு மேல் செய்தால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
