Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பளிச்சென்ற முகத்திற்கு ஏற்ற பீச் ஃபேஸ் பேக்!!!

பீச் பேக் : வறண்ட சருமத்திற்கு இந்த பழம் மிகவும் சிறந்தது. ஆகவே இத்தகைய சருமம் உள்ளவர்கள், இந்த பழத்தின் ஒரு துண்டை வைத்து, முகத்தில் 10-15 நிமிடம் வரை தேய்த்து மசாஜ் செய்து, பத்து நிமிடத்திற்குப் பிறகு ஈரமான துணியால் துடைத்து விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்பு போன்றவை வராமல் இருக்கும்.
பீச் மற்றும் முட்டை ஃபேஸ் பேக் : முகத்தை அழகு செய்வதற்கு ஸ்பா சென்று பணத்தை வீணாக செலவழித்து வருவதை விட, வீட்லேயே இந்த ஃபேஸ் பேக்கை செய்து வந்தால், பணம் மிச்சமாவதோடு, முகமும் அழகாக மாறும். அதற்கு பீச் பழத்தை எடுத்துக் கொண்டு, அதில் இருக்கும் விதையை நீக்கி, முட்டையின் வெள்ளை கருவை கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாக பளிச்சென்று பொலிவுறும்.
பீச் மற்றும் தக்காளி பேக் : தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது சருமத்திற்கு இளமைப் பொலிவைத் தருகிறது. மேலும் தக்காளியில் இருக்கும் ஜூஸ், சருமத்தில் இருக்கும் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகத்திற்கு பளிச்சென்ற தோற்றத்தை தருகிறது. அதிலும் இந்த தக்காளியை எந்த காய்கறி அல்லது பழத்துடனும் சேர்த்து, ஃபேஸ் பேக் செய்யலாம். அதிலும் பீச் மற்றும் தக்காளியை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கிவிடும்.
பீச் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் : எலுமிச்சை சருமத்திற்கு மிகவும் சிறந்த, சருமத்தில் இருக்கும் தூசிகளை நீக்குவதோடு, முகப்பருக்களையும் நீக்கும். ஆகவே பீச் பழத்தை (விதையை நீக்கி) நன்கு மசித்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி, நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதனால் முகம் புத்துணர்ச்சியுடனும், சுருக்கமின்றியும் காணப்படும்.
பீச் மற்றும் தேன் : தேன் ஒரு இயற்கையான சருமத்திற்கு அழகைத் தரும் பொருள். இதில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் சருமத்திற்கு நிறம், அழுக்குகளை நீக்குதல், ஈரப்பசை போன்றவற்றை தருகிறது. அதற்கு நன்கு கனிந்த பீச் பழத்தை அரைத்து, அதில் சிறிது தேனை ஊற்றி பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். வேண்டுமென்றால், அதோடு சிறிது எலுமிச்சை சாற்றையும் ஊற்றிக் கொண்டு, முகத்திற்கு தடவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் பிம்பிள் அல்லது முகப்பரு நீங்கும்.
ஆகவே மேற்கூறிய ஃபேஸ் பேக்களை வீட்டில் இருக்கும் போது செய்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெற்று, பளிச்சென்று மின்னும்.



Click it and Unblock the Notifications