Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
சருமத்தை விரைவில் பொலிவாக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!

ஆகவே அத்தகைய பிரச்சனைகள் வராமலிருக்க, என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று சரிசெய்தாலும், அங்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் சில நேரங்களில் அவர்களுக்கு சருமப் பிரச்சனையை அதிகரிக்கும். எனவே அந்த நேரத்தில் அழகு நிலையங்களுக்குச் செல்வதை விட, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம். இதனால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, முகமும் விரைவில் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.
இப்போது எந்த ஃபேஸ் மாஸ்க்குகள் போட்டால், நன்றாக இருக்கும் என்பதைப் படித்து தெரிந்து கொண்டு, முகத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்
வாழைப்பழத்தில் சருமத்திற்கு தேவையான நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அந்த வாழைப்பழத்தை வைத்து ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத் துளைகள் விரிவடைந்து சுத்தமாவதோடு, சருமத்தில் ஈரப்பசையை அதிகரித்து, முகப்பரு, சரும சுருக்கம், பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழம் சிறிதை மசித்து, 1-2 துளிகள் ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது கொக்கோ பட்டரை சேர்த்து கலந்து வைக்க வேண்டும். பின் முகத்தை பாலால் கழுவி, சிறிது நேரம் ஆவி பிடித்து, டவலை வைத்து துடைத்துவிட்டு, பின்னர் அந்த வாழைப்பழ கலவையை முகத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு பொலிவோடு, புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்
முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், அப்போது வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்கை போட்டால், பருக்கள் போவது மட்டுமின்றி, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கிவிடும். ஆகவே அந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு சிறிது வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் சிறிது பால், எலுமிச்சை சாறு சேர்த்து, நன்கு கலந்து, முகத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, பின்னர் காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகமானது உடனே பளிச்சென்று தோற்றமளிக்கும்.

பப்பாளி ஃபேஸ் மாஸ்க்
முகம் நன்கு பொலிவோடு காணப்படுவதற்கு பப்பாளி மிகவும் சிறந்தது. ஆகவே எங்கேனும் ஒரு விசேஷத்திற்கு செல்லும் முன், சருமம் நன்கு பளிச்சென்று காணப்படுவதற்கு பப்பாளியை வைத்து மாஸ்க் போட்டால் நன்றாக இருக்கும். அதற்கு பப்பாளியை அரைத்து, அத்துடன் சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, 1 நிமிடம் மசாஜ் செய்து, பின் சிறிது நேரம் காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் ஈரப்பசையுடன் காணப்படும். மேலும் இது சருமம் சுருக்கத்தை போக்குவதற்கும் சிறந்தது.

ஆலிவ் ஆயில் மசாஜ்
மேக் கப் போடுவதற்கு முன் சருமம் வறட்சியுடன் காணப்படுகிறதா? அப்படியெனில் ஆலிவ் ஆயிலை வைத்து, முகத்திற்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வேண்டுமெனில் ஃபேஸ் வாஷ்ஷை பயன்படுத்தி கழுவலாம். கழுவியப் பின் முகத்தை துடைத்துவிட்டு பாட்ரத்தால், சருமம் நன்க மின்னுவதோடு, எண்ணெய் பசையுடனும் இருக்கும்.

களிமண் மாஸ்க்
பொதுவாக நாம் முகத்திற்கு போடும் களிமண் மாஸ்க்கிற்கு மூல்தானி மெட்டியைத் தான் பயன்படுத்துவோம். அதுமட்டுமின்றி கடலை மாவையும் அதிகம் பயன்படுத்துவோம். அவ்வாறு போடும் மாஸ்க்கில் மூல்தானி மெட்டியைப் பயன்படுத்துபவர்கள், அத்துடன், ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப்பவுடரைக் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவே கடலை மாவை பயன்படுத்துகிறோம் என்றால், அதோடு சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஃபேஸ் பேக் போட வேண்டும். இவை இரண்டுமே சருமத்திற்கு நல்ல பலனை உடனே அளிக்கக்கூடியவை.



Click it and Unblock the Notifications