Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
ஐஸ் கட்டி மசாஜ் இளமையைத் தரும்!!!

1. முதலில் முகத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து முகத்தில் தடவ வேண்டும். ஃபேஸ் பேக்கானது இயற்கையானதாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் கடலை மாவுடன், முட்டையின் மஞ்சள் கரு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஐஸ் கிரீமை போட்டு கலக்கி முகத்தில் தடவலாம். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்யும் போது நெற்றியில் இருந்து தொடங்க வேண்டும். பின் மெதுவாக கண்ணுக்கு அருகில் செய்ய வேண்டும். முக்கியமாக கண்ணுக்கு அருகில் பண்ணும் போது கவனமாக செய்ய வேண்டும். பின் அதனை ஈரமான துணியால் துடைத்து எடுத்து விடவும்.
2. மற்றொன்று சிறிது ரோஸ்மேரி ஆயில், ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ் வாட்டரை ஒரு பௌலில் விட்டு, பின் ஒரு ஐஸ் கட்டியை அதில் நினைத்து முகத்தில் துடைக்க வேண்டும். இப்படி செய்தால் முகமானது மென்மையாக இருக்கும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். மேலும் எந்த ஃபேஸ் பேக்கை முகத்திற்கு போட்டாலும், இறுதியில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். முகமானது பொலிவுடன் அழகாக இருக்கும்.
நினைவில் கொள்க :
1. மசாஜ் செய்தால் குறைந்தது 2-4 நிமிடமாவது செய்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஐஸ் கட்டி போட்டு முகம் எரிவது போல் இருந்தாலும், சிவப்பு நிறத்தில் மாறினாலும், ஐஸ் கட்டி போடுவதை நிறுத்தவும்.
2. ஐஸ் கட்டிகள் மிகவும் குளிர்ச்சியானவை, அதை போட்டு முகத்தில் எரிச்சலோ அல்லது முகம் சிவப்பு நிறத்தில் மாறினாலோ 30-45 நிமிடத்தில் போக வேண்டும். இல்லையென்றால் அது அலர்ஜி என்று அர்த்தம். பின் அதனை செய்ய வேண்டாம்.
3. ஐஸ் கட்டி பயன்படுத்த கஷ்டப்படுபவர்கள் ஐஸ் பேக் அல்லது ஒரு சுத்தமான துணியை முகத்தில் போர்த்தி அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்து துடைக்கவும். துணியானது சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
4. ஐஸ் கட்டியானது முகத்திற்கு சிறந்த ஒன்று. ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும். மேலும் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து மசாஜ் செய்தால் நல்லது.



Click it and Unblock the Notifications
