Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் பேஸ் மாஸ்க்!

முகத்திற்கு புத்துணர்ச்சி
கொலாஜன் மாஸ்க் போடுவதன் மூலம் சருமம் புத்துணர்வு பெறும், மென்மையாகும். சருமத்தின் சுருக்கத்தை போக்கும். சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்கும். சருமம் தொடர்பான வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும். விரைவில் முதுமை ஏற்படுவதை தடுக்கும். வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.
கொலாஜன் மாஸ்க்கினை வாங்கி அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் காய வைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். மேலும் உண்மையான ஆரஞ்சை வட்டவடிவத்தில் 'கட்' செய்த தோற்றத்துடன், ஆரஞ்சு ப்ளேவருடன் கூடிய கொலாஜன் மாஸ்க்கும் வந்திருக்கிறது. கண், உதடு, மூக்கு போன்ற இடங்களில் ஓட்டை இருக்கும். இதை அப்படியே முகத்தில் பொருத்தி அரைமணி நேரம் கழித்து உரித்து எடுத்து விடலாம். முகம் புத்துணர்ச்சி அடையும். இதை ஒரு பாக்கெட் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.
ஹீட் மாஸ்க்
தற்பொழுது heat mask-ம் புதிதாக வந்திருக்கிறது. இது வயதானவர்களுக்கு மிகவும் உகந்தது. கொலாஜன் ஃபேஷியலுக்கு முன் இந்த ஹீட் மாஸ்க்கைப் போடலாம். இது சின்னச் சின்ன ட்யூப் வடிவத்தில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை ஒரு நிமிடம் மசாஜ் செய்தாற்போல் தடவி ஒரு நிமிடம் விட்டுவிட வேண்டும். இது லேசான சூடாக இருக்கும். ஆனால் உடனடி எஃபக்ட் கிடைக்கும். இது துவாரங்களின் உள்ளே போய் அழுக்கு வெளியே வந்துவிடும்.
கொலாஜன் ஃபேஷியல் தசையை இறுகச் செய்து தோலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கக் கூடியது. ஹீட் மாஸ்க் போடுவதனால் சருமம் பளிச்சென்று மாறும். சில நிமிடங்களிலேயே ஃபேஷியல் செய்த பலன் கிடைத்துவிடும். இதுபோன்ற மாஸ்க் போடுவதானால் சீக்கிரமே முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications
