Latest Updates
-
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது.. -
உங்க குளிர்சாதனப் பெட்டியில் கூலிங் பிரச்சினை இருக்கா? அப்ப ஒரு பேப்பரை வைச்சு ஈஸியா இப்படி கண்டுபிடிங்க
ஆப்பிள் போன்ற கன்னங்கள் வேண்டுமா?

1. ஆப்பிளை சாப்பிட்டால் சுருக்கங்கள் உண்டாவதை தடுக்கலாம். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-ஏஜிங் பொருள் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்கும். மேலும் இறந்த செல்களை நீக்கி, பொலிவான தோற்றத்தை கொடுக்கும். அதிலும் இந்த பேஸ்ட்டை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் பளிச்சென இருக்கும்.
2. மேலும் இது ஒரு சிறந்த கிளின்சர். இந்த பழத்தில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான எண்ணெய் பசையை நீக்கும். அத்தகைய ஆப்பிள் கிளின்சரை செய்ய, முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் மகிமை, இதன் முடிவில் நன்றாக தெரியும்.
3. ஆப்பிளை வைத்து மாஸ்க் செய்தால், அதைவிட நன்றாக இருக்கும். ஏனெனில் அப்போது ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நேரடியாக உடலில் செல்லும். அந்த மாஸ்க் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
4. ஆப்பிளானது பிம்பிள் மற்றும் முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை, முகத்தில் தேய்க்க வேண்டும். இல்லையென்றால் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.
5. முக்கியமாக ஆப்பிள் ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் பொருள். இது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும். அதற்கு தினமும் குளிக்கும் முன், ஆப்பிள் சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்கவும்.
இவ்வாறெல்லாம் செய்தால் முகமானது பளிச்சென்று இருப்பதோடு, தக்காளி பழம் போன்று முகமானது பொலிவோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications
