Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கோடையில் சருமத்தை காக்க ஜில் ஜில் கூல் கூல் ஆயுர்வேத மசாஜ்

மழை, பனி காலங்களை விட சருமம் அதிகம் பாதிக்கப்படுவது கோடையில்தான். சருமத்தில் உள்ள நீர்சத்து குறைவதால் சருமம் பொலிவிழக்கும், கருமையாகும். சருமம் மட்டும் இல்லாமல் தலைமுடி கை, கால்களும் கூட வறண்டு பாதங்களில் வெடிப்பு ஏற்படும். அதை சமாளிக்க வெயில் காலத்துக்கு சருமத்தை கவனிக்க வேண்டும்.
நீர்ச்சத்தான காய்கறிகள்
கோடை சீசனில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களை தவிர்க்காமல் சாப்பிடவேண்டும். லெட்டூஸ், கேரட், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் இழந்த நீர்ச்சத்து உடலில் சமமாகும். இதனால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்படும்.
ஒமேகா 3 கொழுப்பு அடங்கிய உலர் பழங்கள், விதைகளை சாப்பிடலாம். கடல் உணவுகள் சரும ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதேபோல் மத்தியான நேரத்தில் உணவு உண்டபின்னர் இஞ்சி, எலுமிச்சை கலந்த மூலிகை டீ குடிக்கலாம். சருமத்திற்கு மட்டுமல்லாது உணவிற்கு ஜீரணசக்தியை தரும்.
உடற்பயிற்சி செய்யுங்க
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறுகிறது. இதுவும் சரும பாதுகாப்பிற்கு ஏற்றது. தேவையற்ற கழிவுகள் தங்கினால்தான் சருமம் பொலிவு குறைந்து கருமையாக இருக்கும். எனவே யோகா, ஜாகிங், டான்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் சரும அழகை பாதுகாக்கலாம். அதேபோல் இதமான மாலை நேர சூரிய ஒளியில் அமர்ந்து மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சருமத்திற்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.
ஆயில் மசாஜ்
சரும வறட்சிக்கு ஆயில் மசாஜ் செய்யலாம். வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் இரவு நேரத்தில் ஆப்ரிகாட் ஆயில் தேய்த்து மசாஜ் செய்யலாம் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் நம் ஊர் பக்கம் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். அது உடல் சூட்டை தணிக்கும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். மருதாணி மற்றும் செம்பருத்தி கொண்டு செய்யப்படும் ஆயில் மசாஜ், தலைமுடியின் நிறத்தை கூட்டி நன்கு ஊட்டமளிக்கும். இதில் உள்ள இயற்கை கண்டிஷன் முடிகளை பளபளப்பாக்கும்.
ஜில் ஜில் பேசியல்
தர்பூசணி மற்றும் செர்ரி பழங்களின் கலவை கொண்டு பேஷியல் செய்யலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியோடு காட்சியளிக்கும். இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் வெப்பத்தால் ஏற்படும் கருமையை போக்கி பளபளப்பாக்கி, ஈரப்பதம் அளித்து ஆரோக்கியமாக்கும். தாராளமாக தண்ணீர் குடியுங்கள். உங்கள் கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படாமல் இருக்க இதுவே வழிகேரட் சாறுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் பளிச் முகம் உங்களுடையதுதான்



Click it and Unblock the Notifications
